(ஆறுமுகம் பெருமாள்) புத்ராஜெயா அரசாங்க கேந்திர நகர் உருவாவதற்காக தோட்ட குடியிருப்புக்களில் தண்ணீர், மின்சார விநியோகத்தை துண்டித்து 4 தோட்டங்களிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பாட்டாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனம் , அந்த அரசாங்க நகரை நிர்வகிப்பதில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பைத் தந்துள்ளது.ஆனால் அந்த வேலை வாய்ப்புக்களில் நான்கு தோட்டங் களைச் சேர்ந்த எத்தனை இந்தியப் பாட்டாளிகளின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை கொடுத்துள்ளது? புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மத்திய அரசாங்கத்தின் அலுவலக நிர்மாணிப்புத் திட்டங்களுக்காக இங்குள்ள பிராங் பெசார், காலவே, சிட்ஜிலி,மெடிங்கிலி ஆகிய நான்கு தோட்டங்களில் வேலை செய்து வந்த நானூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 1995ஆம் ஆண்டு வேலை நீக்க நோட்டீசை வழங் கியபோது அனைவருக்கும் டிங்கில் நகரை ஒட்டியுள்ள பகுதியொன்றில் மலிவு விலையிலான தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியினை வழங்கியது என மெடிங்கிலி தோட்டத்தைச் சேந்ந்த திலகா, அசோக்குமாரி, சுப்பையா, புஸ்பா அடைக்கலம், சேரியம்மா ஆகி யோர் கூறினார். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டிங்கில் நகரில் நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்கக வீடுகளைக் அவசர அவசரமாக கட்டிக் கொடுத்து குடி யேறுமாறு உத்தரவிட்டபோது அங்கு குடியேறுவதற்கு மறுப்புத் தெரிவித்த பிராங் பெசார் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் மின்சாரம் மற் றும் குடிநீர் விநியோகத்தை புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று துண்டித்தது என இத் தோட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர்களான பெரியக்கா, ராமலிங்கம், காத்தமுத்து, மதனா, சின்னத்தாய், சுப்பையா, ஜெகதாம்பாள், முனி யம்மா, அன்னக்கிளி, ஆறுமுகம், ஆச்சி, தனபால், விஜயலெட்சுமி, ராமதாஸ், தனபாக்கியம், ராமசாமி, முனியாண்டி,வள்ளியம்மா ஆகியோர் நினைவு கூர்ந்தனர். அன்று துன் மகாதீர் முகமட் பிரதமராக பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அந்நடவடிக்கையினால் ஆவேச மடைந்த முன்னூற்றுக்கும் மேற்பட்ட பிராங் பெசார் தோட்ட தொழிலாளர்கள் மறுநாள் அந்நிறுவனத்தின் அலுவலகத்தின் முன் முற்றுகையிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹாஜி ஐடிமின் தொழிலாளர்களை சந்தித்ததுடன் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சு வார்த்தையை நடத்தியதாக இத்தோட்டத்தில் வேலை செய்து வந்த ராமதாஸ் என்பவர் கூறினார். அச்சந்திப்பின்போது அங்குள்ள ஆலயம், தமிழ்ப்பள்ளி, கடைகள், பாலர் பள்ளி, மசூதி போன்றவற்றுடன் ஆட்குறைப்பு அனுகூலத் தொகை என ஆண் டுக்கு ஐந்நூறு வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இரு தரப்புகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நான்கு தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் இருபது தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள் கிடைப்பதிலிருந்து அவர்களது பெயர்கள் விடுபட்டுள்ளதால் அவர்களுக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஒரு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றன. தோட்டத் தொழிற் சங்கத்தின் மூலமாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை செவிமடுத்த ஹாஜி ஐடிமின் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பில் இரண்டு வாரத்தில் அளிப்பதாக அன்று தெரிவித்த அவர், நான்கு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களில் சிட்ஜில்லி தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து பிராங் பெசார், மெடிங்கிலி,காலவே ஆகிய மூன்று தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலமாக ஆண் டொன் றுக்கு ஐந்நூறு வெள்ளி வழங்குவது குறித்து முன்னாள் தோட்ட நிறுவனமான கோல்டன் ஹோப் நிறுவனத்துடன் பேச்சு நடத்திய பின் னர் பதில் வழங்குவதாக அறிவித்தது. இதற் கிடையே தங்களின் கோரிக்கை களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு முன்பாக தோட்டக் குடியிருப்பை காலி செய்யச் சொல்வது உட்பட மின் சாரம், குடிநீர் ஆகியவற்றை துண்டிக்கும் நடவடிக்கையில் புத்ரா ஜெயா நிறுவனம் இறங்கக்கூடாது என்ற கோஷத்தோடு அந்த அலுவலகத்தின் முன் தொழிலாளர்கள் திரண்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்ட குடிநீர், மின்சார சேவை இணைக்கப்பட்டது. இத்தனை போராட்டங்களுக்குப் பின்னரும் நான்கு தோட்டங்களும் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மெடிங்கிலி தோட்டத் தொழி லாளர்களுக்கு அத்தோட்ட நிறுவனம் இழப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு வெ.350 என கணக்கிட்டு வழங்கிய அதேவேளை எஞ்சிய மூன்று தோட்டத் தொழி லாளர்களுக்கு இத்தொகை வழங்கப்பாடாதது குறித்து தோட்ட நிறுவனத்திடம் வினவியபோது மூன்று தோட்டங்களின் தொழிலாளர்களுக்கான இழப் பீட்டுத் தொகை புத்ரா ஜெயா நிறுவனத்திடம் வழங்கி விட்டதாகவும் அங்கிருந்து அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு தோட்ட நிறுவனம் அறிவித்திருந்தது. அன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக டத்தோ அபு ஹாசானும் டிங்கில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் டத்தோ ஷாரீப் பின் ஜாஜாங் பொறுப்பு வகித்து வந்த காலக் கட்டத்தில் நான்கு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் முன் வைத்திருந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாமல் 1999 ஆம் ஆண்டு இங்கு டிங்கில் நகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட அடுக்கக வீடுகளுக்கு செல்ல மறுத்து வந்தனர். இந்நிலையில் மேற்கண்ட வீடுகளுக்கு உடனடி யாகச் செல்ல வேண் டும் என அவர்களை கட்டாயப்படுத்தியதுடன் தோட்டக் குடியிருப்புகளை காலி செய் யுமாறு உத்தரவு போட்ட புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் போக்கை கண்டித்த தொழிலாளர் கள் தரை வீடுகள் உட்பட எங்களின் ஏணைய கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாமல் அடுக்கக வீடுகளுக்குப் போகச் சொல்வது நியாயமில்லை என போர்கொடி உயர்த்திய எங்களை, டத்தோ ஷாரீப் ஜாஜாங் அரசாங்கத் திற்கு எதிரானவர்கள் என்று வர்ணிப்பதா? என பாட்டாளிகள் அவேசம் அடைந்தனர். அதேவேளையில் தங்களின் கோரிக்கைகள் யாவும் செயல் வடிவம் பெறும்வரை புதிய வீடுகளுக்கான சாவியினை பெறுவதில்லை என்ற உறுதியாக முடிவில் இருந்து வந்தனர். 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியன்று மாலை டத்தோ ஷாரீப் ஜாஜாங் தலைமையில் அன்றைய ம.இ.கா தேசியத்தலைவராக பொறுப்பு வகித்து வந்த டத்தோஸ்ரீ. ச.சாமிவேலு முன்னிலையில் வீடுகளுக்கு சாவி வழங்கும் நிகழ்வு அடுக்கக வளாகத்தில் நடைபெற்றபோது நான்கு தோட் டங்களில் இருந்து வர வேண்டிய நானூறு தொழிலாளர்களில் 42 பேர் மட்டுமே சாவிகளைப்பெற வந்திருந்ததுடன் எஞ்சிய 358 பேர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாவிகளைப் பெறுவதற்கு வரவில்லை. இதனால் வருத்தமடைந்த டிங்கில் சட்டமன்ற உறுப்பினரான ஷாரீப் ஜாஜாங், மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள் அனைத்தும் நான்கு தோட் டங்களிலும் அமைய உள்ளதால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மார்ச் மாதம் 1999) இறுதிக்குள் எல்லா தொழிலாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட் டுள்ள அடுக்கக வீடுக ளுக்கு குடிபெயர வேண்டும். இல்லை யெனில் அதன் பிறகு ஏற்படும் அசௌகரியங் களுக்கு தம்மை குறைகூற வேண்டாம் என கூறியதுடன் புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் வழங்கியுள்ள வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப் படவில்லையெனில் அதற்கு தாம் பொறுப்பு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்ற நிலையில் இனியும் சந்தேகமும் தயக்கமும் இல்லாமல் அனைவரும் புதிய வீடுகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். நானூறு தொழிலாளர்களுக்கு கட்டப்பட்டுள்ள மூன்று அறைகளைக் கொண்ட நான்கு மாடி அடுக்கக வீடுகளுக்கு புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறு வனத்தினர் மேற்கொண்ட முதல் பெயர் பதிவின்படி 367 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள் ளதாகவும் எஞ்சியுள்ள 33 காலியான வீடுகளுக்கு நான்கு தோட்டங்களைச் சேர்ந்த பெயர் விடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வீடுகள் பின்னர் வழங்கப்படும் என குறிப்பிட்ட அவர், நாட்டில் எங்கும் இல்லாத விலைக்கு மூன்று அறைகளைக்கொண்ட வீடுகள் வெ.20 ஆயிரம் விலையில் தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என கூறினார் 1994 ஆம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டபோது இவ்வீடுகளின் விலை வெ.37 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது என்றாலும் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டிற்குப் பின்னர் இதன் விலை வெ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது மீண்டும் மாநில அரசாங்கம் புத்ரா ஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் நடத்திய சந்திப்பின் பயனாக வீட்டின் விலை வெ.20 ஆயிரமாக நிலை நிறுத்தப்பட்டது.புதிய வீடுகளுக்கு அவர்கள் மாறிச் செல்வதற்கான சிறப்பு நிதியாக வெள்ளி ஆயிரத்து 500 வழங்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறான வாய்ப்பினை தொழிலாளர்கள் நழுவ விட்டுவிடக்கூடாது என நினைவுறுத்திய ஷாரீப் ஜாஜாங் சிறப்பு நிகழ்வன்று சாவிகளைப் பெறாத தொழிலாளர்களுக்கு பி.என்.எஸ்.பி அதிகாரிகள் தங்களின் வீடுகளுக்குச் சென்று சாவிகளை வழங்குவர் என கூறியிருந்தார். துவக்கத்தில் மேம்பாட்டுத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நானூறு தொழிலாளர்களுக்கு டிங்கில் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்கக வீடுகள் என்பது தற்காலிகமானதுதான் என்பதுடன் இவர்களுக்கு பின்னர் தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் 2001 ஆம் ஆண்டு அடுக்கக வீடுகளில் குடியேற துவங்கினர். அதிலும் அன்றைய மஇகா தலைவர்கள், முதலில் நீங்கள் அடுக்ககத்தில் குடியேறுங்கள். பிறகு உங்களுக்கு காத்திருக்கிறது தரை வீடு என்று நா கூசாமல் பொய் சொன்னார்கள் என்று முன்னாள் தொழிலாளர்கள் கூறினர். தாங்கள் சொர்க்கமாக கருதிய தோட்டங்களில் சுதந்திரமாக உலாவிய பாட்டாளிகள் கூண்டுக்கிளி போன்று நான்கு சுவர்களுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு சில ஆண்டுகளில் பல்வேறு விதமான அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக மழைக்காலம் வந்து விட்டால் நான்கு மற்றும் ஐந்தாவது புளோக்குகளின் கீழ்ப் பகுதியில் மூன்று முதல் நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டு அடுக்கக குடியிருப்பாளர்கள் வெளியில் செல்ல முடியாத அவஸ்தையை அடிக்கடி எதிர்நோக்கி வந்ததுடன் அடுக்ககத்தின் கீழ்ப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு மண் இறங்கியதுடன் அதிலிருந்து ஊற்று நீர் வெளியேறிய சம்பவம் நிகழத்தொடங்கியது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று இரவு இங்குள்ள ஐந்தாவது அடுக்ககத்தில் ஏற்பட்ட நில அதிர்வின்போது வீடுகளின் சுவர்கள் இரண்டாக உடைந்ததுடன் பல பொருட்கள் விழுந்து நொருங்கிக் கொண்டிருந்தபோது நிலைகுலைந்துபோன குடியிருப்பாளர்கள் அடுத்தகணம் கட்டிய துணியுடன் உயிர் பிழைத்தால் போதுமென எண்ணி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அடுக்ககத்திலிருந்து வெளியே ஓடி பனி சூழ்ந்த இருளில் பொழுதை கழித்தனர். இச்சம்பவத்தை கேள்வியுற்றபோது அன்று ம.இ.கா தேசியத்துணைத் தலைவராகவும் மனிதவளத்துறை துணையமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்த டத்தோஸ்ரீ. எஸ்.சுப்பிரமணியம் நிகழ்விடத்திற்கு விரைந்ததுடன் பிரதமர்துறை துணையமைச்சராக இருந்த வேதமூர்த்தியும் வருகை புரிந்து நில வரத்தை நேரில் கண்டனர். இதனிடையே வீடுகளை விட்டு வெளியேறிய பாதிப்புக்குளாகியவர்கள் தங்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல தயங்கியவேளை அவர்களுக்கு சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் உதவியுடன் அடுக்ககத்தின் அருகில் கூடாரம் அமைத்துக்கொடுக்கப்பட்டு அனைவரும் அங்கு தங்க வைக் கப்பட்டனர். இந்நிலையில்தான் இங்கு நடவடிக்கை குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் இதன் மூலமாக பி.எஸ்.எம்.கட்சியில் அன்று செயலாளராக பொறுப்பு வகித்துவந்த அருட்செல்வம் என்பவரின் உதவியை நாடிய குடியிருப்பாளர்கள் தங்களுக்கு அரசாங்கம் தரை வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் எனக் கோரி பல போராட்டங்களை மேற்கொண்டு இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். மிக விரைவில் இங்குள்ள 393 முன்னாள் பாட்டாளிகளுக்கு வெ.20 ஆயிரம் மதிப்புடைய தரை வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. புத்ரா ஜெயா மேம்பாட்டுத் திட்டத்திற்கென அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு தோட்டங்களில் சிலாங்கூரில் பெரிய தோட்டமாக கருதப்பட்ட பிராங் பெசார் தோட்டம் 1860 ஆம் ஆண்டு இஞ்ச் கென்னத் எனும் தோட்ட நிர்வாகத்தின் மூலம் காப்பி தோட்டமாக விளங்கி வந்தது. பின்னர் கெர்னல் ஹன்றி என்பவரின் மூலமாக ரப்பர் தோட்டமாக உருமாற்றம் கண்டதை தொடர்ந்து கொக்கோ உற்பத்தி செய்யப்பட்டு வந்ததுடன் பின்னர் செம்பனையை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அதன் கோல்டன் ஹோப் நிறுவனம் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டங்களையே நம்பி வாழ்க்கையில் பெரும் பகுதியை கழித்துவிட்ட எங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தாமான் பெர்மாத்தா எனும் பெயரில் வழங்கப்பட்டிருந்த அடுக்கக வீடுகளில் பெர்மாத்தா எனும் பெயரை தாங்கும் அளவிற்கு அவ்வீடுகள் இல்லை. எனினும் எங்களின் இடைவிடாத போராட் டங்களினாலும் செயல்வீரர் அருட்செல்வத்தின் துணிச்சலான நடவடிக்கையின் வாயிலாகவும் இன்று தரை வீடுகளைப் பெறவுள்ளதை எண்ணும்போது நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு வெற்றி கிட்டியுள்ளது என மெடிங்கிலி தோட்டத்தைச் சேர்ந்த திலாகா,அசோக்குமாரி,சுப்பையா,புஸ்பா அடைக் கலம், சேரியம்மா மற்றும் காலவே தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.முனியாண்டி, எஸ்.ராமலிங்கம், கணேசன், எம்.கிருஷ்ணம்மா,.தி.ஜானகி, தி.ருக்குமணி, ஆகி யோர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்