கோலாலம்பூர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி வழக்கில் சட்டத்துறை அலுவலகத்தின் சார்பில் ஆஜரான நாட்டின் மூத்த வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவுக்கு கட்டணமாக 95 லட்சம் வெள்ளி கொடுக்கப்பட்டதாக கூறப் படும் விவகாரத்தை அம் பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் செய்தியாசிரியர் கிளேய்ர் ரியூகாசல் பிரவுனின் உதவி போலீசுக்கு தேவையில்லை என்று வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநி வாசன் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வழக்கில் சிக்கல் எதுவும் இல்லை.அதனை மிக எளிதாக தீர்வு கண்டுவிடலாம் என்றார் அவர். இவ்விவகாரத்தில் லண்டனில் உள்ள ரியூகாசல் மலேசியாவுக்கு வந்து மலேசிய போலீசுக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் கூறியிருப்பது குறித்து கருத்துரைத்த போது அம்பிகா மேற்கண்டவாறு கூறினார். டான்ஸ்ரீ அபு பக்கார் வாதம், ஏதோ ஒப்புக்காக சொன்னதுபோல் தெரிகிறது. அவருக்கு (ரியூகாசல்) இண்டர்போல் சிவப்பு அறிக்கை (கைது ஆணை) காத்திருக்கிறது. அவர் இங்கு கால் வைத்ததுமே கைது செய்யப்படலாம் என்று அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார். காலிட் அபு பக்காரின் கூற்று ஓர் எளிய வழக்குக்குத் தீர்வுகாண மலேசிய போலீசுக்கு உதவி தேவை என்று நினைக்க வைத்து அவர்களைத் திறமையற்றவர்களாகக் காண்பிக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல என்றார் அவர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாருமே மலேசியாவில் உள் ளனர். சொல்லப்பட்ட வங்கிக் கணக்குகளும் இங்குதான் உள்ளன. போலீஸ் விசாரணையைத் தொடங்குவதற்கு இவையே போதுமான விவரங்கள். பின் னர் ஏன் தயக்கம்? தகவல் சொன்னவர்களைச் சாடாமல் முறைகேடுகள் குறித்து தகவல் அளிப்போருக்கு காலிட் அபு பக்கார் நன்றி சொல்ல வேண் டும் என்று அம்பிகா கூறினார். கடந்த வாரம் சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட செய்தியின்படி வழக்கறிஞர் ஷாபிக்கு கொடுக்கப்பட்ட பணம் இரண்டு பகுதிகளாகக் கொடுக்கப் பட்டது என்று கூறியிருந்தது. இந்தப் பணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்கியதாகவும் அது கூறியிருந்தது. அன்வார் இப்ராஹிமின் இரண் டாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில் ஷாபி அரசுத்தரப்பு தலைமை வழக்குரைஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவாக் ரிப்போர்ட் டில் வெளி வந்த அச்செய்தியைச் சுட்டிக்காட்டி அன்வார் இப்ராஹிமைக் குற்றவாளியாக்க அரசியல் சதி நடந்திருப்பதாக எதிர்க்கட்சி கூறி வருகிறது. சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பலமுறை தொடர்புகொண்டும் ஷாபி இவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்