கோலாலம்பூர், இருமொழித் திட்டத்தை (டி.எல்.பி.) அமல்படுத்த எந்தவொரு பள்ளிக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு அமல்படுத்த முற்படுவது சட்டத்திற்கும் கூட் டரசு அரசமைப்பு சாசனத்திற்கும் புறம்பானது என்று தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித்திட்ட அமலாக்கத்தை கடுமையாக எதிர்த்து வரும் மே 19 இயக்கத் தினர் நேற்று வலியுறுத்தினர். பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இரு மொழித் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று கோரிய நிலையில்தான் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் - பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் உட்பட மூவர், பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக வழக்கு தொடுக்க முன்வந்துள் ளனர் என்று அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான தமிழ் இனியன் தெரிவித்தார். இதற்கு மே19 இயக்கம் சட்ட ஆலோசனையையும், தங்க ளது முழு ஆதரவினையும் வழங்குகிறது என்றார் அவர். இதன் விளைவாக, விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இருமொழித் திட்டத்தில் பயிலும் சில மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி எந்த ரீதியில் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை தங்களுக்கு இல்லையா? என்ற விவாதத்தை முன்வைத்துள்ளனர். அதாவது, இருமொழித் திட்டத்தைத் தேர்வு செய்வது தங்களது உரிமை என்பது அவர்களின் கருத்தாகும். தமிழ்ப்பள்ளிக்குத் தமிழ்மொழி வழி கல்வி, வழங்குவதுதான் அதன் கட்டமைப்பாகும். தமிழ்ப்பள்ளியின் ஆணி வேர் - தமிழ்மொழி வழி கல்வி. ஆங் கிலம் மற்றும் மலாய் போன்ற மொழிப்பாடங்களைத் தவிர மற்றவை தமிழ்மொழியில்தான் இருக்க வேண்டும். அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட எம்பிஎம்-எம்பிஐ என்ற கல்விக்கொள்கையின் கீழ் ஆங்கில மொழியின் திறனை அதிகரிக்கப் பல வியூகத் திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது. அதில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களின் கற்றல், கற்பித்தல் தமிழில்தான் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இருமொழித் திட்டம் என்ற பெயரில், அறிவியல்-கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது ஒரு கொல்லைப் புறமாகத் தமிழ்ப்பள்ளிகளில் நுழைக்கப்பட்ட கண் டனத்திற்குரிய திட்டமாகும். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பது என்பது 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் வினைப்பயன். தமிழ் வழிக் கல்வி இருப்பதால்தான், இவை தமிழ்ப்பள்ளிகள். இதுதான் தமிழ்ப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு. இக்கட்டமைப்பின் நிலைப்பாட்டிற்குத் தோட்டப் பாட்டாளி மக்கள், பாமரர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் சாரா இயக்கங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரின் அயராத உழைப்பும், உணர்வுமே காரணம். இக்கட்டமைப்பினை மாற்றப் பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை உள்ளது. ஆனால், தமிழ்ப்பள்ளியில் தாங்கள் விரும்பும் மொழியில்தான் கற்றுத்தர வேண்டும் எனச் சொல்லும் உரிமை இவர்களுக்குத் துளியும் கிடையாது. அப்படிப்பட்ட சூழல் தமிழ்ப்பள்ளியின் கட் டமைப்பை முற்றாகச் சீரழித்துவிடும். அவ்வகையில் தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்புக்கு அழிவைக் கொடுக்கும் உரிமை எந்தப் பெற்றோருக்கும் கிடை யாது. தமிழ்ப் பள்ளி என்பது இச்சமூகத்தின் உரிமை என்பதனை இவர்கள் உணர வேண்டும் என்று அண்மையில் புத்ராஜெயாவில் இந்த இரு மொழி கல் வித்திட்டத்திற்கு எதிராக தாங்கள் தெரிவித்த ஆட்சேபத்தை சுட்டிக்காட்டி தமிழ் இனியன் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்