பெட்டாலிங் ஜெயா, நாட்டிலுள்ள அனைத்து போலீஸ் தடுப்புக் காவல்களிலும், விசாரணை அறைகளிலும் முறையாக இயங்கும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜ.செ.க வலியுறுத்தியுள்ளது.போலீஸ் தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், இவ்வாண்டு மட்டும் இதுவரை அறுவர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். ஆனால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு நேற்று கூறினார். பண்டார் பாரு கிள்ளான் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமராக்கள் போலியானவை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் பகிரங்கப் படுத்தியது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.ஒரு பணியாளருக்குச் சொந்தமான பொருட்களை மற்ற பணியாளர்கள் எடுப்பதை தவிர்ப்பதற்காகவே அந்த ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன என்று பாலமுருகன் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்த ஏ.எஸ்.பி ஹரூண் அபு பக்கார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து தடுப்புக் காவல்களிலும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று 2013-இல் புக்கிட் அமான் நிர்வாக இயக் குநராக இருந்த மொர்தாட்ஸா நசரீன் உறுதியளித்ததை கஸ்தூரி நினைவுறுத்தினார். ஜிஞ்சாங், ஷா ஆலம், இந்திரா மக்கோத்தா குவாந்தான், பாயான் பாரு, கோத்தா கினபாலு ஆகிய போலீஸ் நிலையங்களில் ரகசிய கேமராக்கள், இண்டர் காம் இணைப்புகள், ஒரு வழக்கறிஞர் அறை, ஒரு நீதிமன்ற அறை, ஒரு கட்டுப்பாட்டு அறை, அடையாள அணிவகுப்பு அறை, ஓய்வெடுக்கும் அறை, உணவருந்தும் அறை என எல்லா வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாக கஸ்தூரி பட்டு குறிப்பிட்டார்.இந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்