கோலாலம்பூர் மலாயா தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவரும் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான தர்மலிங்கம் பெருமாள் நேற்று அதிகாலையில் காலமானார். இவருக்கு வயது 57.சிறிது காலமாக நோய் வாய்ப் பட்டிருந்த தர்மலிங்கம், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். சுமார் 33 ஆண்டுகள் ஆசிரியர் துறையில் பணியாற்றி வந்த ஆசிரியர் பி.தர்மலிங்கத்தின் இறுதி சடங்கு பத்துகேவ்ஸ் ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள அவரின் இல் லத்தில் நடைபெற்றது. இவரின் இறுதி ஊர்வலம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோர் என சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் வளாகத்தில் கூடி நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் துறை யில் இவர் வழங்கிச் சென்ற உன்னத சேவையை அங்கு கூடியிருந்த மாணவர்களின் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் எழுந்த அலறலும் கண்ணீரும் அதனை உணர்த்தியது. பள்ளி வளாகத்தில் கூடியிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கண்ணீர் மல்க இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அனைவரிடமும் சாதாரணமாக பழகக் கூடிய குணம் கொண்ட இவரின் மறைவு இவரின் குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி அவருடன் பழகிய அனைவருக்கும் வேதனையை அளித் துள்ளது. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 3 மணியளவில் புறப்பட்டு செராஸ் மின்சுடலையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்