சுங்கைப்பட்டாணி, இங்கு தாமான் ஆர்கிட்டிலுள்ள தனது வீட்டில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளார். விசாரணக்கு ஏதுவாக அந்த நபரை ஒரு வார காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கு இங்குள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த மே மாதம் 26ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் வீட்டின் பின்பகுதியில் தன் தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிய இளைஞர் ஒருவர், தாயின் மீது கொளுந்து விட்டு எரியும் தீயைக் கண்டு பதறிப் போனார். அதன் பின்னர் அந்த மாது சொந்தமாக குளியலறைக்குச் சென்று உடலில் நீரை ஊற்றி நெருப்பை அணைத்துள்ளார். அந்த மாது பயங்கர தீக்காயங்களுடன் அங்கேயே விழுந்தார். அவரை உடனடியாக அவரின் மகன் சுங்கைப்பட்டாணி சுல் தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். எனினும் அந்த மாதுவின் நிலை மிகவும் கவலைக்கிட மாக இருந்ததைத் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த மாது, நேற்று முன்தினம் காலை 8.27 மணிக்கு உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்ததில் அந்த மாது வீட்டின் பின்புறம் கோழி இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த அவரின் கணவர், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டதாக தெரிய வந்தது. கணவரை பிரிந்து கடந்த 10 வரு டங்களாக அந்த மாது தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவம் தெரிய வந்துள்ளது. பொறாமையின் காரணமாக, தன் மனைவி மீது அந்த ஆட வர் இத்தகைய அராஜகத்தை புரிந்து இருக்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்