ஈப்போ மனிதக் கடத்தலுக்கு இலக்கானவர்கள் என நம்பப்படும் ஐந்து தாய்லாந்து பிரஜைகளை பிச்சை எடுக்கச் செய்யும் கும்பல்களின் பிடியிலிருந்து மீட்டுள் ளதாக பேரா மாநில குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் போலீஸ் மூத்த உதவி ஆணையர், டத்தோ கான் தியன் கீ கூறியுள்ளார்.18க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் தாய்லாந்து நராத்திவாட் எனுமிடத்தில் பள்ளிவாசல் ஒன்றை நிறுவுவதற்கு எனக் கூறி நிதியுதவி கேட்டுள்ளனர். இது கடந்த 11 மாதங்களாக நடந்து வந்துள்ளது. சம்பந்தப்பட்ட தாய்லாந்து பிரஜைகள் நிதி வசூலிக்கும் பணியை முறையாக மேற்கொள்கிறார்களா எனக் கண்காணித்து வேலை வாங்குபவரான 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளார்.தஞ்சோங் ரம்புத்தான், தாமான் தஞ் சோங் டாமாயிலுள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாயன்று இரவு திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதையடுத்து அந்த கண்காணிப்பாளர் கைது செய்யப் பட்டார். ஆள் கடத்தலுக்கு உள்ளான ஐவரில் ஒருவரை கூனோங் ராப்பாட்டில் போலீஸ் கைது செய்தது. அவரிடம் பண உதவி கேட்கும் நடவடிக் கைகள் குறித்த ஆவணங்கள் இருந்தன. அத்துடன் மஸ்ஜிட் நூருல் ஹுடாவுக்கு நிதி வசூலிக்கும் ரசீது களும் இருந்தன. அவரின் மூலமாக மற்ற வர்களும் பிடிபட்டனர். வெள்ளை நிற கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெ.924 ரொக்கம், 5 கைத் தொலைபேசிகள், நிதி வசூலிக்கும் பில் புத்தகங்கள் 4, 5 கடப் பிதழ்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கு 2007 ஆம் ஆண்டு ஆள் கடத்தல், புலம் பெயர் வோரை கடத்துவதற்கு எதிரான சட்டப் பிரிவு 12, 41 ஆகியவற்றின் கீழ் புலனாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்