கோலாலம்பூர் தென்கிழக்காசிய நாடுகளில் உடல் பருமன் பிரச்சினை அதிகமாக நிலவும் நாடாக மலேசியா அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆசியானில் உடல் பருமன் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி வகைகள் மீதிலான ஆய்வின் போது இந்த உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உடல் பருமன் பிரச்சினை 13.3 விழுக்காடும் கூடுதல் எடை பிரச்சினை 38.5 விழுக்காடும் நிலவுவது அந்த ஆய்வின் வழி தெரிய வரு கிறது.உடல் பருமன் பிரச்சினையில் 7 முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகள் முதலிடம் வகிக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 6 முதல் 11 வயது வரையிலான ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. அது மட்டுமின்றி, மலேசியாவில் 14 விழுக்காட்டினர் மட்டுமே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மூன்றில் ஒரு பகுதியினர் உடற் பயிற் சியை செய்வதே இல்லை என்பதையும் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.மலேசியாவில் பல்சுவை உணவு வகைகளுக்கு பஞ்சமில்லை. இதுவே இந்த உடல் எடை பிரச்சினைக்கு முக்கியமான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்