காஜாங், இந்திய மகளிருக்கு பகுதி நேர வருமானத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் அவர்களுக்கு தையல் மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வகுப்புக்காக அரசாங்கம் வழங்கிய மானியம் துஷ்பிரயோகம் செய்து இருப்பதாக கூறி காஜாங் வட்டாரத்தை சேர்ந்த மகளிர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை பயன்படுத்தி மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் நடத்தாமல் அந்தப் பணம் என்னவானது என்று கேட்டு அவர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை பயன்படுத்தி மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் நடத்தாமல் அந்தப் பணம் என்னவானது என்று கேட்டு அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தையல் மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாகக் கூறி பிரதமர் துறைக்குக் கீழ் செயல்படும் இந்திய சமூக, பொருளாதார மேம்பாட்டு அமைப்பிடமிருந்து ( செடிக்) மானியம் பெற்ற பின்னரும் வகுப்புகளை அங்கு நடத்தவில்லை என சம்பந்தப்பட்ட மகளிர் பாங்கி இந்திய இளைஞர் அமைப்பு ஒன்றுக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளனர். தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான வகுப்புகளை நடத்துவதாக வாக்குறுதி அளித்த அந்த இயக்கம், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அதற்கான நேர்முகக்காணலை நடத்தி அதில் தகுதியுடையவர்களையும் தேர்வு செய்ததாகச் செல்வமலர் தெரிவித்தார். இவர்தான் அந்த நேர் முகக்காணலில் தகுதியானவர்களைத் தேர்வு செய்தவர் ஆவார். காஜாங்கில் தையல் மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரிப்பது தொடர்பான பயிற்சிகளை வழங்கும் அகாடமியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காஜாங்கில் தையல் மற்றும் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தன்னுடைய சுயவிவர ஆவணங்களை வைத்துதான் செடிக்கில் அனுமதியையும் மானியத்தையும் அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் பெற்றுள்ளனர். ஆனால், இன்றைய நிலவரப்படி பயிற்சி வகுப்புகள் காஜாங்கில் நடத்தப்படுவதற்குப் பதிலாக பல புகார்களுக்குப் பிறகு அவசர அவசரமாகப் பத்துகேவ்ஸ் பகுதியில் நடத்தப்பட்டு வருவதோடு அதில் பெரும்பாலும் இயக்கத்தைச் சார்ந்தவர்களே பங்கேற்பதாகவும் தன்னுடைய சுயவிவர ஆவணங்களை இவ்விவகாரத்தில் இருந்து மீட்டெடுக்கவும் இயலவில்லை எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் நேர்முகக்காணலை நடத்தியவர்கள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையில் எவ்வித வகுப்புகளையும் நடத்தவில்லை. இது குறித்த தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் இல்லை. இதனால், சம்பந்தப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கி விட்டனர். கடந்தாண்டு தொடங்கிய இந்த விவகாரம் அல்லது போராட்டம், செடிக், காவல்நிலையம், மஇகா தலைமையகம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய இடங்களில் ஏறி இறங்கியும் இன்று வரையிலும் முடிவு பெறவே இல்லை. செடிக்கிற்குச் சென்று வந்த பின்னரும் நிலைமை சரிசெய்யப்படாததால் இது குறித்து காஜாங் காவல்நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை.எனவே, இறுதி முயற்சியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளில் ஒருவரிடம் இது தொடர்பாகப் பேசப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட இயக்க ஆலோசகரிடம் விசாரணையும் மேற்கொண்டார். இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. முடிவில், என்னிடமே பேரம் பேசப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பின் புகாருக்குப் பிறகு சம்பந்தப் பட்டவர்கள் அவசர அவசரமாக பத்துகேவ்ஸ் பகுதியில் வாரயிறுதி நாட்கள் ஒன்றில் வகுப்பை நடத்தத் தொடங்கினர். போக்கு வரத்தைக் காரணமாகக் கூறியதால் பேருந்து வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், காஜாங்கில் நடத்தப்பட்ட நேர்முகக் காணலில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் ஓரிருவரைத் தவிர யாரும் இவ்வகுப்புகளுக்குச் செல் லவில்லை. எனவே, நிலைமையைச் சமாளிக்க இயக்கத்தில் உள்ளவர்களே வகுப்புகளில் பங்கெடுத்து வருகின்றனர்.மேலும், தொடக்கத்தில் உணவும் வழங்கப்படவில்லை. விவகாரம் நாளிதழ்களில் வந்து தீவிரமடைந்த பிறகே இப்போது உணவு வழங்கப்படத் தொடங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாகப் பேசிய செல்வமலர் தெரிவித்தார். இந்த வகுப்பு காஜாங்கிலேயே நடத்தப்பட வேண்டும் என மேற்கொண்டு வந்த அத்தனை முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர் போலாகி விட்டதாகத்தான் உணர்கிறேன். இதனிடையே, பயிற்சி வகுப்புகளைக் காஜாங்கில் நடத்துவதாக வாக்குறுதி அளித்து விட்டு இப்போது பத்துகேவ்ஸில் நடத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என இதனால் பாதிக்கப்பட்ட பெண்களான நிர்மலாதேவி (46), புஷ்பா (47), மாலா (45), பொன்மகள் (42), பிரேமா (38), தேவராணி (36), ராதா (45), ஷீலா (40), ஸ்ரீ குமாரி கமலா (31), ராதா (29), சுகுமாரி (43), மகேஸ்வரி (38) ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்கத்தின் வழியாக செடிக் வழங்கிய மானியம் எங்கே? அந்தப் பணம் என்னவானது? ஏன் காஜாங்கில் அந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படவில்லை? ஏன் இலக்கு மாறி போனது? இதில் பண துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆராய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்