img
img

தாயார் இறப்பதற்கு முன்பு தம்பியிடம் ஒப்படைக்கப்பட்ட வைஷ்ணவியே அந்தச் சிறுமி!
வியாழன் 08 ஜூன் 2017 12:38:42

img

கோலாலம்பூர், பூச்சோங் பெர்டானாவில், 62 வயதுடைய மாதுவால் துடிக்கத் துடிக்க அடித்துத் துன்புறுத்தப்பட்ட 6 வயது சிறுமியின் விவகாரம் சமூக வலைத்தளங் களில் இன்னும், ஓயவில்லை. அந்தச் சிறுமி யார்? அடித்துத் துன்புறுத்திய அந்த மாது யார்? அந்தச் சிறுமியின் தந்தை என்று கூறிக் கொண்டவர் உண் மையில் தந்தையா? எனப் பல திடுக்கிடும் செய்திகள் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. சிறுமி மாறி மாறி பிரம்பால் அடிக்கப்படும் 3 நிமிட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு மலேசியர்கள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளனர். இது தொடர்பாக துரித நடவடிக்கையில் இறங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட மாதைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர். சாப்பிடும் போது சோறு சிந்திவிட்டது என்பதற்காக அந்த சிறுமியைப் பிரம்பினால் இடைவிடாமல் கதறக் கதற அடித்துக் கொண்டே இருந்தார் அந்த மாது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட முறை பிரம்பினால் அடிக்கப்பட்ட போது வலிதாங்க முடியாமல் சிறுமி அலறும் காணொளியைக் கண்ட பல மலே சியர்கள் கண்ணீர் சிந்தினர். ஆவேசத்துடன் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தச் சிறுமியின் தந்தை எனக் கூறிக் கொண்ட ஒருவர், மற்றொரு காணொளியை வெளியிட்டு, சிறுமி தன்னுடைய 4 ஆவது பிள்ளை என்றும் பராமரிப்பதற்காகத் தனது மாமியாரிடம் விட்டு வைத்திருந்த போது இந்தக் கொடுமை நடந்திருந்தப்பதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். சிறுமி அடிக்கப்படும் போது அந்தக் காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு பெண்மணி, ஏன் சிறுமி அடிக்கப்படுவதைத் தடுக்கவில்லை என்ற கேள் வியையும் அவர் எழுப்பி இருந்தார். இந்நிலையில் அந்தச் சிறுமி யார்? என்பது பற்றி சமூக ஊடகங்களில் குரல் பதிவு செய்தியை ஒரு பெண் வெளி யிட்டு அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறார். அந்தச் சிறுமியை அடித்தவர் அவளுடைய பாட்டியே அல்ல. தன் பிள்ளை என்று கூறி காணொளியை வெளியிட்டவர் அந்தச் சிறுமியின் தந்தையே அல்ல என்றும் அந்தப் பெண்மணி தகவல் வெளியிட்டிருக்கிறார்.அந்தக் குரல் பதிவுச் செய்தி மேலும் கூறுவதாவது: அந்தச் சிறுமியின் பெயர் வைஷ்ணவி. பாவம் அந்தச் சிறுமிக்குச் அம்மா இல்லை. சிறுமி ஒரு வயது குழந்தையாக இருந்த போது அவளுடைய அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார். எனக்கு இவர்களை எல்லாம் நன்கு தெரியும். வைஷ்ணவியின் அம்மா நிறையக் கனவுகளுடன் இருந்தார். பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பும் காட்சியைக் காண ஆசைப்பட்டார். வைஷ்ணவியைப் பட்டதாரியாக்க ஆசைப்பட்டார். தாம் இறக்கும் முன்னர் ஒரு வழக்கறிஞரை அமர்த்தித் தன்னுடைய குழந்தையைத் தனது தம்பியிடம் தத்துக் கொடுத்து வளர்க்கும்படி செய்தார். மேலும், அப்பா வேறொரு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வேறு வழியில்லாமல் இந்த ஏற்பாட்டை செய்த பிறகு இறந்து போனார். ஆனால், அவருடைய தம்பியோ, அந்தப் பிள்ளையைத் தன்னுடைய மாமியாரிடம் ஒப்படைத்தார். இதனால் தான் இந்தக் கொடூரம் நடந்தது.தன்னுடைய மாமி யாரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டது தனக்குத் தெரியாது என்று ஒருவர் கூறுவது ஏற்கக் கூடியதா? சாதாரணமாகக் குழந்தைகளைப் ‘பேபி சிட்டரிடம்" விட்டால்கூட சிறிது காயங்கள் இருந்தால் அது பற்றி விசாரிப்போம். பதறிப் போவோம்.ஆனால், மாமியாரிடம் விடப்பட்ட குழந்தை, இப்படி அடிக்கப்படும் போது காயங்களோ, உடலில் வீக்கங்களோ ஏற்படாமல் இருந்திருக்குமா? அதனை அப்பா என்று கூறும் அவர் பார்த்திருக்க மாட்டாரா? கவனித்து இருக்கமாட்டாரா? எனவே, சமூக வலைத்தளங்களில் இருக்கும் மக்களே சிந்தித்து பாருங்கள். இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடாதீர்கள். நிறைய கேள்வி எழுப்புங்கள். தன்னுடைய மாமியாரைக் காப்பாற்ற முயற்சிப்பது போல இருக்கிறது. கடந்த ஆண்டில் சிறுமி அடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி என்கிறார்கள். அந்தக் காணொளியைப் பார்த்து அது கடந்த ஆணடு எடுக்கப்பட்டது என்று அந்த சிறுமியே சொல்கிறாள். அவளுக்கு தெரிந்திருக்கும் போது, தன் மாமி யார் அடித்து துன்புறுத்துவது தனக்குத் தெரியாது என்று அவர் சொல்வது நம்பக்கூடியதா? வீடியோ எடுத்த அந்தப் பெண், ஏன் தடுக்கவில்லை என்று கேட்கிறார். இது கூட தன் மாமியாரைக் காப்பாற்றுவதற்காகவா?என்று அவரிடம் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும். இதை இப்படியே விட்டு விட அனுமதித்து விடாதீர்கள். அந்தச் சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இறந்து போன அவளுடைய அம்மாவுக்கும் நியா யம் கிடைக்க வேண்டும். எனது குரல் பதிவைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்குங்கள். மக்களிடம் இது போய்ச் சேரவேண்டும். இவ்வாறு அந்தக் குரல் பதிவில் அந்தப் பெண் கூறியிருக்கும் தகவல் பரபரப்பாகச் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. எனினும், இந்தக் குரல் பதிவுக்கு உரியவர் பற்றி விவரங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்தத் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் பெயரையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், அதனை உறுதிப்படுத்த இயலவில்லை. அந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்த இயல வில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img