img
img

வேறு வேட்பாளர்கள் இல்லையென்றால் பிரமராக வர நான் தயார்
வியாழன் 08 ஜூன் 2017 12:33:48

img

பெட்டாலிங் ஜெயா பிரதமர் பதவிக்கு வேறு எவரும் கண்ணில் படாத நிலையில் ஒருமித்த கருத்து உருவாகினால், சிறிது காலத்திற்கு அப்பதவியை மீண்டும் ஏற்பது குறித்து தான் பரிசீலிக்கத் தயார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் வருவதற்கு சாத்தியம் உண்டு என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் கூறியதாக நிக்கே ஆசியன் ரிவியூ நேற்று முன்தினம் பிரசுரித்த ஒரு செய்தி கூறிற்று. வேட்பாளர் வேறு யாரும் இல்லை என்றால் நான் முயற்சி செய்யலாம். ஆனால் இதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே என்றார் அவர். எனினும் தேர்தல்களில் வெற்றி பெறும் அனுபவம் தனக்கு அதிகம் இருப்பதால், எதிர்க்கட்சியை வெற்றி இலக்கை நோக்கி வழி நடத்திச் செல்வதிலேயே தனது கவனம் இப்போது இருப்பதாக டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார். தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது இல்லை என்றும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.பிரதமர் பெரும் அதிகாரமிக்கவர். நானும் அதிகாரம் உள்ளவனாக இருந்தேன். ஆனால் என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தியது இல்லை. ஐந்து முறை நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று அவர் மேலும் கூறினார். ஆசியாவின் எதிர்காலம் மீதான 23ஆவது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்டர் மகாதீர் நேற்று முன்தினம் தோக்கியோ சென்றார். ஆசிய அரசியல் தலைவர்களுக்கான ஒரு கருத்தரங்காகும் இது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img