பெட்டாலிங் ஜெயா பிரதமர் பதவிக்கு வேறு எவரும் கண்ணில் படாத நிலையில் ஒருமித்த கருத்து உருவாகினால், சிறிது காலத்திற்கு அப்பதவியை மீண்டும் ஏற்பது குறித்து தான் பரிசீலிக்கத் தயார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் வருவதற்கு சாத்தியம் உண்டு என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் கூறியதாக நிக்கே ஆசியன் ரிவியூ நேற்று முன்தினம் பிரசுரித்த ஒரு செய்தி கூறிற்று. வேட்பாளர் வேறு யாரும் இல்லை என்றால் நான் முயற்சி செய்யலாம். ஆனால் இதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே என்றார் அவர். எனினும் தேர்தல்களில் வெற்றி பெறும் அனுபவம் தனக்கு அதிகம் இருப்பதால், எதிர்க்கட்சியை வெற்றி இலக்கை நோக்கி வழி நடத்திச் செல்வதிலேயே தனது கவனம் இப்போது இருப்பதாக டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார். தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது இல்லை என்றும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார். பிரதமர் பெரும் அதிகாரமிக்கவர். நானும் அதிகாரம் உள்ளவனாக இருந்தேன். ஆனால் என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தியது இல்லை. ஐந்து முறை நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று அவர் மேலும் கூறினார். ஆசியாவின் எதிர்காலம் மீதான 23ஆவது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்டர் மகாதீர் நேற்று முன்தினம் தோக்கியோ சென்றார். ஆசிய அரசியல் தலைவர்களுக்கான ஒரு கருத்தரங்காகும் இது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்