புத்ரா ஜெயா தங்களுடைய பொறுப்பில் இருந்த ஒரு கூட்டுறவுக் கழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நால்வருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. இவர்களில் மூவர் டத்தோ அந்தஸ்து உடையவர்கள். ஒரு கூட்டுறவுக் கழகத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து கருத்துரைத்த எம்ஏசிசி தலைமை ஆணையர் ஸுல்கிப்ளி அகமட், எம்ஏசிசி விரைவில் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்றும் அதுவரையில் பொறுத்து இருங்கள் என்றும் கூறினார். அந்த நான்கு ஆடவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படுவார்களா அல்லது ரிமாண்டில் வைக்கப் படுவார்களா என வினவப்பட் டதற்கு ஸுல்கிப்ளி இவ்வாறு பதிலளித்தார்.ஓர் அரசாங்க தொடர்பு நிறு வனத்தில் (ஜிஎல்சி) உள்ள ஒரு கூட்டுறவுக் கழகத்தின் வாரிய உறுப்பினர்களான இந்த ஆட வர்கள் தங்களுடைய அதிகா ரத்தை தவறாக பயன்படுத்தி இந்த கூட்டுறவுக் கழகத்தில் தங்களுடைய சொந்த எம்எல்எம் முறையை அறிமுகப்படுத் திய துடன் கூட்டுறவுக் கழகத்தின் உறுப்பினர்களை அந்த எம்எல்எம் வர்த்தகத்தில் உறுப் பினர்களாக பதிந்து கொள்ளும் படியும் கட்டாயப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பதிந்து கொள்ளும் உறுப்பினர்கள் 6,700 வெள்ளி செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக அவர்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் வழங்கப்படும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்