ஜொகூர்பாரு கடப்பிதழ் குற்றத்திற்காக அனைத்துலக மாக்காவ் ஊழல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 52 வெளிநாட்டவர்கள் மீது நேற்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.22 சீன நாட்டவர்களும் ஆறு தைவானியர்களும் மாஜிஸ் திரேட் முகமட் அஸ்லான் ஷா முகமட் அலியாஸ் முன்னிலை யில் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் 11 பேர் கடந்த ஜூன் முதல் தேதி போலீஸ் நிலையத்தில் மலேசியாவில் நுழைந்ததற்கான முறையான பத்திரங்களை காட்டத் தவறியவர் களாவர். மேலும் 17 பேர் கடந்த மே 24ஆம் தேதி ஹெரிசோன் ஹில்லில் அதே குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட் டனர். மற்றொரு நீதிமன்ற அறையில் மாஜிஸ்திரேட் நூர் ஆய்ஷா அமாட் முன்னிலையில் கடந்த மே 24ஆம் தேதி ஹெரிசோன் ஹில்லில் அதே குற்றத்தைப் புரிந்ததாக மேலும் 24 சீன நாட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைவரும் 1959/63 குடி நுழைவுச் சட்டம் பிரிவு 6(1) (சி)யின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட வேளையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண் டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவ துடன் கூடியபட்சம் ஆறு பிரம்படி வழங் கவும் சட்டம் வகை செய் கின்றது. அனைவருக்கும் எதிராக மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில் தங்களுக்கு கடப்பிதழ்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வர்கள் கூறியதோடு குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்