சுபாங்ஜெயா சாப்பிடும் போது சோறு வெளியே சிந்தியது என்பதற்காக ஆறு வயது இந்திய சிறுமியை பிரம்பால் கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி அடித்துத் துன் புறுத்திய அந்தச் சிறுமியின் பாட்டியைப் போலீசார் 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. சுமார் 62 வயதுடைய அந்த மாது, நேற்று காலை 10 மணியளவில் போலீஸ் ரோந்துக் காரில் லாக்-அப் உடையுடன் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அந்த மாது சிறுமியை பிரம்பால் அடித்துத் துன்புறுத்திய வீடியோ பதிவு, நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி, மலேசியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணைக்கு மேலும் உதவும் வகையில் 7 நாள் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவிப் பதிவு அதிகாரி ஹைரோல் அஷார் இஷாக் அனுமதி அளித்தார். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த மாதுவின் கூட்டாளியான மற்றொரு மாது இந்த வீடியோவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது என்று சுபாங்ஜெயா போலீஸ் தலைவர் முகமட் அஸ்லின் சதாரி கூறினார். 2001ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் அந்த மாது விசாரிக்கப்படவுள்ளார். கிட்டத்தட்ட 2 நிமிடம் 50 வினாடி நேரம் கொண்ட இந்த வீடியோவில் அந்தச் சிறுமியை பிரம்பால் இடைவிடாமல் அடித்து வலியினால் பிள்ளை துடித்த நிலையிலும் மீண்டும் மீண்டும் அடித்தது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காணொளியைக் கண்ட மக்களில் சிலர் பூச்சோங் பெர்டானாவில் உள்ள சம்பந்தப்பட்ட கொடுமைக்கார மாதுவின் வீட்டின் முன் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் திரண்டனர். அதே வேளையில் சமூக ஊடகங்களில் பரவிய அந்தக் காணொளி போலீசாரின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரணையில் இறங்கிய சுபாங்ஜெயா போலீசார் இரவு 11 மணியளவில் அந்தச் சிறுமியை மீட்டதோடு அந்த மாதுவையும் கைது செய் தனர். இதனை சுபாங்ஜெயா ஓசிபிடி முகமட் அஸ்லின் சதாரி உறுதிப்படுத்தினார். சற்று தெளிவில்லாமல் காணப்பட்ட அந்தக் காணொளியில், சாப்பிடும் போது சோறு, சாப்பாட்டுத் தட்டை விட்டு வெளியே சிந்தி விட்டதற்காக அந்த மாது சிறுமியை பிரம்பு போன்ற குச்சியால் மிக மோசமாக அடிக்க அடிக்க அந்தச் சிறுமி வலி தாங்காமல் அலறித் துடிக்கிறாள். அந்த மாது அரக்கக் குணத்துடன் மேலும் மேலும் அடிக்கிறார். இடைவிடாமல் பலம் கொண்ட மட்டும் சிறுமியை அடித்துக் கொண்டே ‘சாவு.. சாவு.. சாவு..’ என்று தமிழில் ஆக்ரோஷமாக கத்துகிறார். இந்த இடைவெளிக்குள் பிரம்புக் குச்சியினால் சிறுமியை அந்த மாது 30க்கும் மேற்பட்ட முறை அடித்த துயரத்தை காணொளியில் கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாகவும் கண்ணீர் சிந்த வைப்பதாகவும் இருந்தது. சிறுமியின் சட்டையைப் பிடித்து இழுத்து முரட்டுத்தனமாக அதனை கழற்றி எறிந்த பின்னர் சிறுமியை இழுத்துக் கொண்டு மற்றொரு அறையை நோக்கிச் செல்லும் போதே மீண்டும் மீண்டும் அடிக்கிறார். முதுகில் பட்ட அடிகளினால் வலிதாங்க இயலாத சிறுமி தனது இரு கைகளாலும் முதுகை மறைப்பதற்காக படும்பாடு பெரும் வேதனையாக இருந்தது. அடிப்பது சிறிது நேரம் நின்ற நிலையில் சிறுமி தேம்பித் தேம்பி அழமுயற்சிக்கிறார். அழக்கூட முடியாமல் அவளுக்கு மூச்சுத் திணறுகிறது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த மாது சிறுமியின் முகத்திலும் முதுகிலும் மாறி மாறி அறைகிறார். காலால் உதைக்கிறார். சிறுமி கீழே விழுகிறாள். பின்னர் அவளை இழுத்துப்பிடித்து மீண்டும் சட்டையை முரட்டுத்தனமாக சிறுமிக்குப் போட்டு விடுகிறார். சிறுமியை கண்மூடித்தனமாக அடிக்கும் அந்த கொடுமைக்காரப்பாட்டியின் காணொளி நேற்று முன்தினம் வெளியானது தொடர்பில் தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அச்சிறுமியின் பாட்டியை இரவு 11.30 மணியளவில் கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிறுமி யின் தந்தை கூறுகையில், என் மகள் என் மாமியாரின் பாதுகாப்பில்தான் இருந்தாள். என் மாமியார் இப் படிச் செய்வார் என்பது எனக்குத் தெரியாது. அவர் மீது நான் போலீசில் புகார் செய்துள்ளேன். என் மகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக காத்துக்கொண் டிருக்கிறேன். என் மகள் தாக்கப்பட்ட காட்சியை என் மாமியாரின் நண்பர் பதிவு செய்திருக்கக் கூடும் என நான் சந்தேகிக்கிறேன். ஆனால் கண் முன்னால் என் குழந்தை அடித்து துன்புறுத்தப்பட்டதைக் கண்டு காணாமல் பதிவு செய்த அந்த மாதுவின் மனசாட்சியற்ற செயலும் வேதனை அளிப்பதாக அவர் இந்த சம் பவத்திற்குப் பிறகு பதிவுசெய்த காணொளியில் கூறியிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்