கோலாலம்பூர் ஏறத்தாழ 11 வருட காலமாக கடப்பிதழ் இல்லாத காரணத்தால் ஆரோக்கியமேரி தமிழகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். போலி ஏஜெண்டுகள் இவரை வீட்டுப் பணிப் பெண்ணாக இங்கு வரவழைத்து அநேக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். என்ன செய்வது ஏது செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்த ஆரோக்கிய மேரி இறுதியாக மலேசிய உலக மனித நேயத்தின் தலைவர் த.கமலநாதனின் உதவியினை நாடினார். ஆரோக்கிய மேரிக்கு எந்த வொரு குடியுரிமையும் இல்லை. எனவே, கமலநாதன் நேரடியாக தமிழகம் சென்று இவரின் உறவினர்கள் மூலமாக தக்க ஆவ ணங்களை சேகரித்தார். ஆரோக் கிய மேரியின் தந்தை இறந்து விட்டார். அவருக்கு ஜெயந்தி, பிரியா, ஜான்சி என்ற மூன்று பெண் பிள்ளைகள். தன் பெரியம்மா ஆரோக்கியமேரியினை காண வேண்டும் என்று மூன்று பிள்ளைகளும் தவியாய் தவிப்பதை பார்க்க படுபரிதாபமாக இருக்கிறது. தமிழகத்தில் பெற்ற சம்பந்தப் பட்ட ஆவணங்களைக் கொண்டு கமலநாதன் ஆரோக்கிய மேரியினை இங்குள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று தமிழகம் திரும்ப தக்க ஏற்பாடுகளை செய்தார். உடனே தற்காலிக அட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரோக்கிய மேரியின் அநேக இன்னல்கள் முடி வுக்கு வந்தது. விரைவில் இவர் தாயகம் திரும்புவார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்