புத்ரா ஜெயா போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த எஸ்.பாலமுருகன் விவகாரம் தொடர்பு இஏஐ என்ற அமலாக்க அமைப்பு உயர்நெறி ஆணையம் பொது விசா ரணை நடத்தி வருகிறது. நேற்று மற்றொரு தடுப்புக் காவல் கைதி தமிழரசன் சாட்சியமளித்தார். தானும், பாலமுருகனும் மற் றும் ஆஸ் தியென் கோக் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்ட விஷயம் குறித்து தமிழரசன் ஆணையத் தலைவர் டத்தோ யாக்கோப் முன்னிலையில் விவ ரித்தார். பாலமுருகனை அடித்து துன் புறுத்தியவர் ஓர் இந்திய போலீஸ் அதிகாரி என்றும் விசாரணையின் போது சுட்டிக் காட்டினார். ‘ஏய் வெளியே நீ மண் டைனா உள்ளே நான் மண்டைடா என்று அந்த அதிகாரி பாலமுருகனை பார்த்து கூறி அடுக்கடுக்காக கேள்வி கேட்டு அடித்து நெருக்கினார். தமிழிலில் அவர் கூறியதன் அர்த் தம் என்னவென்று கேட்ட போது ‘லுவார் அவாக் கேங்ஸ்டர், டாலாம் சயா கேங்ஸ்டர்’ என்பதுதான் இதன் அர்த்தம். பாலமுருகன் ஓங்கி உதைக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டதை தான் அருகில் இருந்து இதைப் பார்த்தேன். அய் யோ அடிக்காதீர்கள், வலிக்கிறது என்று ஆஸ் தியென் கோக் அலறும் காட்சி வேதனையாக இருந்தது. ஆஸ் தியென் கோக் தமிழ் பேசக்கூடியவர்தான். தான் எவ்வாறு தாக்கப்பட்டேன் என்று தமிழரசன் நா தழுதழுக்க விவரித்தார். விசாரணை நடக்கும்போது சம்பந்தப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகள் உள்ளே கொண்டு வரப்பட்டனர். இவர்களை அடையாளம் காட்டுமாறு தமிழரசன் கேட்டுக் கொள்ளப்பட்டார். பிறகு எவர் எவரை அடித்து துன்புறத்தினார் என்ற விவரம் இவர் தெரிவித்தார். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று இறுதியாக பாலமுருகன் என்னிடம் கூறிய வார்த்தைகள். பாலமுருகன் என் முதலாளி. டயர் மறுசுழற்சிக் கடை யில் நான் பணியாற்றி வந்தேன். ஒரு நண்பனின் கார் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது. அவருக்கு உதவி புரிவதற்காக நாங்கள் பால முருகனின் காரில் சென்று கொண்டிருந்தோம். போலீஸ் ரோந்து கார் எங்களை இடைமறித்தது. நாங்கள் வைத்திருந்த உபகரண பெட்டியில் கூர்மையான கத்தி இருந்தது. மறுசுழற்சி டயரை வெட்டிப் பார்த்து சோதிப்பதற்கு பயன்படுத்தும் கத்தி இது என தமிழரசன் விசாரணையின் போது விளக்கம் தந்தார். தான் சொல்வது எல்லாம் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என தமிழரசன் தமிழில் சத்திய பிரமாணம் செய்தார். சுஹாகாம் போன்ற தரப்புகளும் இவரை குறுக்கு விசாரணை செய்தன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்