கோலாலம்பூர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செயலாற்றிய மூத்த வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா பிரதமரிடமிருந்து 95 லட்சம் வெள்ளியைப் பெற்றுள்ளார் என்று கூறப்படுவது குறித்து அதிகாரிகள் புலன் விசாரணை செய்ய வேண்டும் என பார்ட்டி அமானா நெகாரா (அமானா) தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று இது குறித்து புகார் செய்யப்பட்டது. அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஈடு படுவதை ஷாபி உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புகார் செய்த பி.கே.ஆர். கட்சியின் இளைஞரணி தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார். பி.கே.ஆர் தொடர்பு பிரிவின் இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்ஸில், அதன் சமய பிரிவின் தலைவர் வான் ஜி வான் ஹுசின் ஆகியோருடன் நேற்று காலை 11 மணிக்கு நிக் நஸ்மி அப்புகாரை செய்தார். கடந்த 2015 மார்ச் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பக்ரி ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் தெக் ஹொங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் துறை அமைச்சரான டத்தோ நான்சி ஷுக்ரி,அன்வார் இப்ராஹும் ஓரினப் புணர்ச்சி வழக்கில் முகமட் ஷாபி வழங்கிய சேவைக்காக அரசாங்கம் மொத் தம் 1,000 வெள்ளி செலுத்தியதாகக் கூறினார். சட்டத்துறையில் நன்கு அனுபவம் வாய்ந்தவர் என்பதால் ஷாபியை அரசாங்கம் நியமனம் செய்தது. அட்டர்னி ஜெனரலும், ஷாபியும் அங்கீகரித்தால் மட் டுமே என்னால் முழுமையான தொகையை அம்பலப்படுத்த முடியும். இரு தரப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் அவரின் சேவைக்காக வெ.1,000 செலுத்தப்பட்டது என்பதை என்னால் சொல்ல முடியும் என்று அவர் விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்