ஷா ஆலம் நாட்டிலேயே மிகவும் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றான யுஎஸ்ஜே முன்னாள் சீபீல்டு தோட்ட ஆலயத்தை உடைக்க விட மாட்டோம். அந்த ஆலயம் அதே இடத்தில் நிலை நிறுத்தப்படுவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் முழுவீச்சில் மேற்கொள்வோம் என்று நேற்று காலையில் திரண்ட மக்கள் உறுதி பூண்டனர். மேலும் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் நம்பிக்கையளிப்பதாக ஆலய போராட்டத்திற்காக தொடங்கப்பட்ட சிறப்பு பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவித்தனர். இதனைக் கேட்ட, ஆலய பாதுகாப்பிற்காக நேற்று காலையில் திரண்ட திரளான பொது மக்களும் ஆதரவாளர் களும் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். பணிக்குழு வழக்கறிஞர், சட்ட ஆலோசகர்கள் முடிவெடுத்தது போல் ஆலயத்தை நிலைநிறுத்தும் செயல் பாடுகள் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளதாக பணிக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான இளங்கோவன் அண்ணாமலை கூறினார். ஆலயத்தை உடைப் பதற்கு ஒரு சிறிய இடம் கூட கொடுக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்று காலை ஓம்ஸ் தியாகராஜன், குணராஜ் ஆகியோர் உட்பட நால்வர் கொண்ட குழு மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை சந்தித்து நீதிமன்ற ஆணைக்கு அவகாசம் கேட்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே மந்திரி புசார் மூலமாக தற்காலிகமாக ஒரு வாரகால அவகாசம் பெறப்பட்டதுடன் கூடுதல் அவகாசம் பெறவும் ஆலய நில விவகாரம் பற்றி பேசுவதற்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட நில அலு வலகத்திற்கும் நேற்று சென்றனர் என்று ஆலய பராமரிப்புக்குழுத் தலைவர் நாகராஜூ தெரிவித்தார். இன்று மீண்டும் ஆலய நிலம் பற்றிய மறு ஆய்வு செய்யும் மாவட்ட அலுவலகத்துடனான கூட்டத்தில் அவர்களும் சிறப்பு பணிக் குழுவினரும் கலந்து கொள்வார்கள் என்றார் அவர். அதே நேரத்தில் ஆலய நிலம் தொடர்பான நீதிமன்ற ஆணைய தடையுத்தரவுக்கான வழக்கு விசாரணையும் இன்று நீதிமன்ற நீதிபதி அறையில் நடை பெறும் என்று வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாக அவர் சொன்னார். இதனிடையே ஆலய நிலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை சந்திப் பதற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சிவராசா அங்கு நேரில் வந்தார். ஆலய நில விவகாரம் தொடர்பான முடிவுகள் ஒரு புறம் இருப்பினும் இதைப்பற்றி தாம் மந்திரி புசாரிடம் பேசவிருப்பதாக அவர் கூறினார். ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்தும் முடிவு மாநில அர சாங்கம் கையில் உள்ளது என்று கோத்தாராஜா ம இ கா தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆர் எஸ் மணியம் குறிப்பிட்டார். இது போன்ற ஓர் ஆலய பிரச் சினைகளை மாநில அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதனை இந்தியப் பிரதிநிதிகள் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகோள் விடுத்து மகஜர் ஒன்று மாநில அரசாங்கத்திடம் விரைவில் வழங்கப்படும் என்று டத்தோ டி.மோகன் தெரிவித்தார். பூச்சோங் முரளி, ஓம்ஸ் தியாகராஐன், சிவராஜ் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்