ஈப்போ வர்த்தகத் துறையில் பெண்கள் சாதனை படைப்பதற்கு அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஈப்போ பாராட் மகளிர் தலைவி லெட்சுமி கூறினார். ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் ஆதரவுடன் புந்தோங் சட்டமன்ற சேவைமையத்தினருடன் இணைந்து ம.இ.கா. கம்போங் ஹாக் அவுன் கிளை ஏற்பாடு செய்திருந்த ஆடை அலங்கார பின்னல் பயிற்சி வகுப்பை நிறைவு செய்து பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்று கையில் இவ்வாறு கூறினார். பெண்கள் தனித்தனியாக வர்த்தகத் துறையில் முன்னேற்றம் காண்பது என்பது சிரமமான ஒன்று என்பதால் ஒரு கூட்டு முயற்சியாக அனைவரும் ஒன்றி ணைய வேண்டும். பத்து பேர் குழுவாக செயல்படும் போது பல வர்த்தகங்களை கூட்டு முயற்சியில் மேற்கொள்ளலாம் இதற்கு பலவிதமான பயிற்சி களை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. வர்த்தகத் துறையில் ஈடுபடுவதற்கு அமானா இக்தியார் போன்ற அரசாங்க ஸ்தாபனங்கள் உதவி தயாராக உள்ளன. பேரா அரசின் பேனா உபாயா மூலமாக வும் உதவிகள் பெறலாம் இதற்கு பெண்கள் ஒன் றிணைந்திருப்பது அவசியம் என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்