தஞ்சோங் மாலிம் தஞ்சோங் மாலிம் ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரம் செல்வதற்கு மின்தூக்கி இல்லாததால் பயணிகள் உயரமான படிகளில் ஏறிச்செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பத்திரிகை வியாபாரி கனி அப்துல்லா தெரிவித்தார். அன்றாடம் பயணிகள் உயரமான படிகளில் சிரமப்பட்டு ஏறிச் செல்வதைக் காண பரிதாபமாக இருப்பதாகக் கூறினார். தஞ்சோங் மாலிமிலிருந்து ரவாங் அல்லது செண்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் குறிப்பாக முதியோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிகளில் ஏறிச் செல்லும் நிலைமையை அன்றாடம் காணமுடிகின்றது என டாக்சி ஓட்டுநர் மெய்யப்பன் கூறுகிறார். சில சமயங்களில் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகளை டாக்சி ஓட்டுநர்களே கைத்தாங்கலக அழைத்துச் சென்று மறு பிளாட்பாரத்தில் விட்டு விட்டு வருவதாகவும் கூறினார். எல்.ஆர்.டி ரயில் மூலம் ரவாங் செல்லும் வேளைகளில், பெட்டி களை உடன் கொண்டு வரும் பயணிகள் படிகளில் ஏறிச்செல்ல மிகவும் சிரமப் படுவதை கண் கூடாகக் பார்த்ததாக அடிக்கடி ரயில் சேவையை பயன் படுத்தும் பாடசாலை பணியாளர் நடராஜனும் பாதுகாவலர் ராஜேந்திரனும் கூறுகின்றனர். பல வேளைகளில் அவர்கள் பெட்டிகளைத் தூக்க சிரமப்படும் பயணிகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்தனர். தஞ்சோங் ரயில் நிலையத்தில் அன்றாடம் நூற்றுக் கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருவதாக வாகன விற்பனையாளர் மதுரை வீரன் கூறுகிறார். எல்.ஆர்.டி. சேவை தலைநகரிலிருந்து தஞ்சோங்மா லிம் பட்டணம் வரை மட்டுமே வழங்கப் படுவதால் பேராங், பேராங் ஸ்டேஷன், பெல்டா குடியேற்றத் திட்டம் போன்ற பகுதிகளிலிருந்து பயணிகள் பணியிடங்களுக்குச் செல்வதற்கு ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். ஒரு பெரிய ரயில் நிலையமாக கருதப்படும் தஞ்சோங் மாலிம் ரயில் நிலையத் தில் மின்தூக்கி வசதி இல்லாதது பெரும் குறையாகவே கருதப்படுவதாக அவர் தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் முன்னுரிமைக் கொடுப்பதாகக் கூறும் மலேசிய ரயில் நிறுவனம் தஞ்சோங் மாலிம் ரயில் நிலையத்தில் மின் தூக்கி வசதியைப் பொருத்துவது பயணிகளுக்கு வழங்கும் முக்கிய சேவையாக கருதப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்