கோலாலம்பூர் வயிற்றுக்கு கீழ் செயலிழந்து விட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நந்தகுமார் பொதுமக்க ளின் உதவியை நாடியுள்ளார்.30 வயதான நந்தகுமார் த/பெ சண்முகம் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.இச்சாலை விபத்தால் நந்தகுமாரின் முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டது. அதே வேளையில் அவரின் வயிற்றுக் கீழ் உறுப்புகள் செயலிழந்து விட்டது. பினாங்கு கிளேனிக்கல் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.அரசியல் தலைவர்களுடன் பொதுமக்களும் வழங்கிய ஆதரவால் மருத்துவமனையில் கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டன.ஆனால் இக்கட்டணத்தில் கூடுதல் 18 ஆயிரம் வெள்ளியை எங் களால் செலுத்த முடியாமல் போனது. பணம் போதாத நிலையில் அக்கட்டணத்தை நாங்கள் செலுத்த வில்லை. இதனால் நந்தகுமாருக்கு அங்கு தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ மனைகளுக்குச் சென் றால், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கே செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.பணம் இல்லாததால் கிளேனிக்கல் மருத்துவமனைக்கு நாங்கள் செல்லவில்லை என்று நந்தகுமாரின் அக்கா சரஸ்வதி கூறினார். நந்தகுமாருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள னர். அதில் இரண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றனர். சிரமத்தில் வாழும் என் தம்பிக்கு உதவும் வகையில் செர்டாங் வட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். ஒரு சில நல்லுள்ளங்கள் படைத்த மக்கள் எனக்கு உதவினார்கள். ஆனால் ஒரு சில இயக்கத் தலைவர்கள் என் முயற்சியை ஏளனமாக பேசுகின்றனர். எங்களுக்கு உதவவில்லை என்றாலும் பரவாயில்லை என் தம்பியின் நிலையை பற்றி ஏளனமாக பேசவேண் டாம் என்று அக்கா சரஸ்வதி கேட்டுக் கொண்டார். நந்தகுமாருக்கு உதவ விரும்பும் பொதுமக்கள் 014-9098781 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்