img
img

குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.
ஞாயிறு 04 ஜூன் 2017 14:13:40

img

ஆகாயப் பயிற்சி மாணவர் ஜுல்பர்ஹான் ஒஸ்மான் மரண விவகாரம் தொடர்பில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் எச்சரித்தார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப் படுவர். மலேசிய ஆயுதப் படையும் மலேசிய தேசிய பாதுகாப்பு பல் கலைக்கழகம் இதுகுறித்து துரிதமாக புலனாய்வு செய்யும்படி அமைச்சர் அறைகூவல் விடுத்துள்ளார். மரணத்திற்கு காரணம் கருங்காலிகளை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும். ஜுல் பர்ஹானுக்கு ஏற்பட்ட கதி குறித்து அமைச்சர் ஆழ்ந்த கவலையினை தெரிவித்தார். தாம் 2004ஆம் ஆண்டு கல்வியமைச்சராக இருந்த காலத்தில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தை அமைச்சர் நினைவு கூர்ந்தார். பகடிவதையால் நெகிரி செம்பிலானில் ஒரு மாணவர் மரணமுற்றார். இச்சம்பவம் இன்னும் என் நினைவில் பசுமரத் ஆணி போல் இருக்கிறது. இது எங்களுக்கு பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பள்ளிகளில் பகடிவதையினை அல்லது வன்குறும்பினை ஒடுக்குவதற்கு கல்வியமைச்சு முழு வீச்சிலான நடவடிக்கையில் இறங்கியது. மகனை பறி கொடுத்த குடும்பத்தினர் மனம் என்ன பாடுபடும் என்று எனக்கு தெரியும். இவர்களின் நிலை குறித்து நான் பெரும் துயரம் கொண்டுள்ளேன். இதற்கிடைய இவ்விவகாரம் குறித்து அவசியமில்லா ஆரூடங்களை கூற வேண்டாம் என்று பொதுமக்களை ஆயுத படையினர் அறிவுறுத்தியுள்ளனர். விவகாரத்தை விசாரிக்க அதிகாரிகளிடமே விட்டுவிடுவோம்.மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் ஆகாயப்படை பயிற்சி மாணவர் மரணமடைந்த விவகாரத்தை உயர் கல்வித்துறை அமைச்சு கடுமையாக கருதுகிறது. ஜுல்பார்கான் மரணமடைந்த விதம் ஒரு துயரமான விவகார மாகும். கடந்த வியாழக்கிழமை யன்று இந்த 21 வயது மாணவர் செர்டாங் மருத்துவ மனையில் மரணமுற்றார்.இவர் சரீர ரீதியில் துன்புறுத்தப் பட்டது மரணத்திற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. மடிக் கணினி தொடர்பில் இவர் அடித்து துன்புறுத்தப்பட் டார். இரும்புக் கொண்டு இவருக்கு சூடு வைக்கப்பட்டது. இறுதியில் இது இவரின் மரணத் தில் முடிந்தது. புலனாய்வில் உதவுவதற்கு அமைச்சும் பல்கலைக் கழகமும் மலேசிய ஆயுதப் படையினருடனும் அரச மலேசிய போலீஸ் படையினருடனும் ஒத்துழைக்கும். கொலை விவகாரமாக போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img