சிரம்பான், ஜூன் 4- தேசிய வாகன தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் சீரமைக்கப்படாவிட்டால் ஆண்டுதோறும் 100 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.கடந்த ஆண்டு மாதமொன் றுக்கு 6,000 வாகனங்கள் என்ற விகிதத்தில் 72,000 வாகனங் கள் மட்டுமே விற்கப்பட்டதால் புரோ ட்டோனுக்கு 50 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 2016இல் அரசாங்கம் 150 கோடி வெள்ளி குறைந்த வட்டியிலான கடனை வழங்கி உதவியது. இவ்வாண்டு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் போன்ற அம்சங்களுக்கு 110 கோடி வெள்ளி கூடுதலாக தேவைப் படுகிறது.இந்த நிறுவனத்தை நம்பி 60,000 பேர் இருப்பதால், புரோட் டோனை காப்பாற்ற மக்களின் பணத்தை நாம் பயன்படுத்து கிறோம். இதுவும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு என்று அவர் கூறினார். பாரோய் ஜெயா பள்ளி வாசலில் நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்