கோலாலம்பூர் மாநில பள்ளி வாசல்களில் அரசியல் சொற்பொழிவுகளுக்கு தடை விதிக்கும் சிலாங்கூர் சுல்தானின் ஆணைக்கு எதிராக தான் போலீசில் புகார் செய்து இருப்பதாக கூறப்படுவதை பிகேஆர் சிவராசா ராசையா மறுத்து இருக்கிறார். இணையத்தள கலந்துரையாடல் கட்டமைப்பின் வழி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தான் போலீசில் புகார் செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது என சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா தெரிவித்தார். தான் பிகேஆர் உதவித் தலைவர் என்றும் சமூக ஆர்வலர் பீட்டர் சோங் தனது தனிப்பட்ட உதவியாளர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப் பதையும் சிவராசா மறுத்தார். ஜோடிக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் தீய எண்ணம் கொண்டவர்கள் என்றார் அவர். நான் பிகேஆர் உதவித் தலைவர் அல்ல. எனது தனிப்பட்ட உதவியாளராக இருந்த பீட்டர் சோங் 2015ஆம் ஆண்டே அந்தப் பதவியில் இருந்து அகற்றப் பட்டுவிட்டார் என்று அவர் தெரிவித்தார். சமூக ஆர்வலரான சோங், இவ்வாண்டு தொடக்கத்தில் தாய்லாந்தில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக் கப்பட்டிருந்தது பின்னர் அவர் பட்டாயாவில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த அறிக்கையை வெளியிட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து என் சட்ட ஆலோசகர்களுடன் விவாதிக்க இருக் கிறேன் என்று சிவராசா மேலும் கூறினார். கம்போங் மலாயு சுபாங்கில் உள்ள ஒரு பள்ளிவாசலில் அரசியல் சொற்பொழிவு ஆற்றியதாக கூறப்படுவது தொடர்பில் சிவராசா அண்மையில் மாநில சுல்தானின் கோபத்திற்கு ஆளானார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்