கோலாலம்பூர் அடுத்த மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் அமைத்தால், பிரதமராக வர பிபிபிஎம் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விருப்பம் தெரிவித்து இருப்பதை பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்கின் நிராகரித்தார். பக்காத்தான் ஹராப்பான் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு தலைவரும் முந்திச் சென்ற முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க முற்படக்கூடாது. கூட்டு தார்மீக கொள்கைகளையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த கருத்தொருமிப்பு அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று புக் கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷம்சுல் கூறினார். பக்காத்தான் ஹராப்பானுக்கான பிரதமர் வேட்பாளராக வருவது குறித்து பரிசீலிக்க தான் தயார் என மகாதீர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளர் என பக்காத்தான் ஹராப்பான் பங் காளிக் கட்சிகளிடையே இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் ஷம்சுல் குறிப்பிட்டார். பதினான்காவது பொதுத் தேர்தலில் அரசாங்கம் மாறினால் பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளராக அன்வார் இப்ராஹிமின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.எனவே, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இனிமேல் எழக் கூடாது என்றார் அவர். பதினான்காவது பொதுத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது மீதே கவனம் முழுவதும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்