ஜார்ஜ்டவுன் பேரா, தெலுக் இந்தானில் உள்ள தனது வளாகத்தில் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கர்ப்பால் சிங்கின் உருவத்தைப் போன்றிருக்கும் ஒரு சிலையை தாவோயிசத் கோவில் காட்சிக்கு வைத்திருப்பதை கண்டு அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். எனினும், அந்த சிலையை என்ன செய்வது என்பது குறித்து தாங்கள் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று கர்ப்பாலின் புதல்வர் ராம்கர்ப் பால் கூறினார்.எந்தவொரு சமயத்தையும் அவமதிக்க நாங்கள் எண்ணவில்லை என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்ப்பால் கூறினார். அந்த சிலையின் புகைப்படங் கள் சமூக ஊடகங்களில் கடந்த வியாழக்கிழமை பரவியபோது இந்த விவகாரம் தன் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததாக அவர் கூறினார்.சிலையைப் பற்றிய செய்தி சீன மொழி பத்திரிகைகளில் பரவலாக பிரசுரிக்கப்பட்டது. தெலுக் இந்தானில் உள்ள தொக்கோங் டா போ கோங் கோவிலின் பராமரிப்பாளர் கோ சங் ஹுவாட் இந்த சிலையைப் பற்றி குறிப்பிடுகையில், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பூர மரத்தைக் கொண்டு அந்த சிலை உருவாக்கப்பட்டதாக கூறினார். ஜசெக முன்னாள் தலைவரான கர்ப்பால், 2014ஏப்ரல் 17ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்