புத்ரா ஜெயா தி மேக்னி பிசெண்ட் செஞ்சரி என்ற நாடகத் தொடரின் உள்ளடக்கத்தை ஆய்வு, தணிக்கை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும் படி ஆஸ்ட்ரோவிற்கு திரைப்பட தணிக்கை வாரியம் (எல்பிஎப்) உத்தரவிட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தினருக்கு பொருத்தமில்லாத காட்சிகள் அந்த நாடகத் தொடரில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்ட்ரோ தனது ஒளியலை வரிசைகளில் காண்பிக்கப்படும் அனைத்துலக நிகழ்ச்சிகளையும் திரைப்பட தணிக்கை வாரியத்திடம் கொண்டுவராமல் தானே தணிக்கை செய்து வருவதாக எல்பிஎப்ஓர் அறிக்கையில் கூறிற்று. பொது மக்களிடம் இருந்து வந்த புகார்களை தொடர்ந்து எல்பிஎப் மே 29 ஆம் தேதி திங்கட்கிழமை ஆஸ்ட்ரோவுடன் இந்த விவகாரம் குறித்து விவா தித்தது. பொது மக்களிடம் இருந்து மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவிற்கும் (ஜாக்கிம்) புகார்கள் வந்து கிடைத்திருப்பதால் அதன் அதிகா ரிகளும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். ஆஸ்ட்ரோ மாயா எச்டியிலும் ஆஸ்ட்ரோ பிரிமாவிலும் ஒளிபரப்பப்படும் துருக்கிய வரலாற்று நாடக தொடர், 16 ஆம் நூற்றாண்டில் ஒட்டோமான் பேரரசின் சுல்தானாக நீண்ட காலம் ஆட்சி புரிந்த சுலைமான் தி மேக்னிக் செண்ட் பற்றிய கதையாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்