பெட்டாலிங்ஜெயா அண்மையில் ஆதரவற்றவர்களான இரு சிறார்களுக்கு அடுத்த 19 ஆண்டுகளுக்கு உதவும் வகையிலான ஓர் எழுத்துப்பூர்வ உறுதி மொழியை பினாங்கில் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் வழங்கியுள்ளார். ஹாய்ரியா அலிஷா ஹோஸிம் (வயது 10), ஹாய் ரியாவின் 18 மாத சகோதரி ஹாய்ரா அம்னி ஆகியோ ரின் சிரம நிலையை பணி ஓய்வு பெற்ற கார்ப்பரல் ஏ அருள் ஜேசுதாசனும் அவரின் துணைவியார் எம். சுசிலாதேவியும் கேள்விப் பட்டனர். அதையடுத்து அவர்கள் கடந்த செவ்வாயன்று பினாங்கு மருத்துவ மனைக்கு சென்று அச்சிறார்களை பார்த்து வந்தனர். கடந்த ஏப்ரல் 29இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் அச்சிறார்களின் தந்தை ஹோஸிம் இஸ்மாயில் (வயது 32), தாய் ஹாய்ருன்னிசா அஹ்மட் கமாலு டின் (வயது 31) மரணமுற்றனர். எனினும் அவர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை காப்பாற்றி விட் டனர். மேற்கண்ட உறுதிமொழியின் படி அருள் தற்போது முதல் 2025ஆம் ஆண்டு வரை டிசம்பர் மாத ஓய்வூதியத்தின் பாதித் தொகையை அப்பெண் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குவார் அது அக்குழந்தைகள் தங்களின் புதிய கல்வி ஆண்டினை தொடக்க உதவும் வகையிலான தாகும். அந்த உறுதியேற்பின்போது ஜார்ஜ் டவுன் ரோட்டரி கிளப் பொது உறவு இயக்குநர் டான் லா உட னிருந்துள்ளார். சம்பந்தப் பட்ட உறுதிமொழி ஆவ ணம் அக்குழந்தைகளிடம் பார்ட்டி அஸ்ஷா அரிஃ பின் (வயது 53) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்