அலோஸ்டார் கெடா மாநில அரச மலேசிய போலீஸ் படையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு இந்திய போலீஸ் அதிகாரி களுக்கு பதவி உயர்வும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. கோலமூடா மாவட்ட (சுங்கைப்பட்டாணி) போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த இன்ஸ் பெக்டர் எஸ்.கந்தன் நேற்று ஏ.எஸ். பியாக பதவி உயர்வு பெற்றார். இவர் அரசியல் பிரிவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரோடு கெடா மாநில போலீஸ் தலைமை யகத்தைச் சேர்ந்த கே.பிரகாஷ் என்பவரும் ஏ.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இவர்களோடு கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் நீண்டகாலமாக குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிவரும் நிக்லஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். ராஜேந்திரன், சுந்தர், முனியாண்டி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சார்ஜனாக பதவி உயர்வு பெற்றனர். இந்த பதவி உயர்வுக்கான சின்னங் களை கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி யூசோப் பொறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்