பாசிர் பூத்தே, பாசிர் பூத்தே மாவட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இறந்து கிடந்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவியல் விசாரணை பிரிவில் பணியாற்றி வந்த அகமட் அல்-ஷமிர் ஷாரிப் பெலிடின் (வயது 29) இச் சம்பவத்தில் பலியானார். நேற்று காலை காவல் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு அவர் வராத காரணத்தினால், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரைத் தேடியுள்ளனர். அவரின் இருக்கையில் அமர்ந்திருந்த வாக்கில் அவர் காணப்பட்டுள்ளார். முன் புறமாக சென்று பார்க்கையில் அவரின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த காயமும் ரத்தக் கசிவும் ஏற்பட்டிருந்ததாக கிளாந்தான் மாநிலத்தின் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் டின் அகமட் தெரிவித்தார். காலை 9.40 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் போலீஸ் அதிகாரி இறந்தது விட்டதை உறுதிப் படுத்தினர். இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி சிலாங்கூரைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பாசீர் பூத்தே காவல் நிலையத்தில் குற்றவியல் விசாரணை பிரிவில் பணியை தொடங் கியதாக டின் அகமட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்