பெட்டாலிங் ஜெயா, விமானப் பயணிகளிடமிருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு ஏர் ஆசியா குழும தலைமை செயல்முறை அதிகாரி (சிஇஓ) டத்தோஸ்ரீ டோனி பெர்னாண் டஸ் விமானப் பணியாளருக்கு உதவும் காட்சி சமூக ஊடகத்தில் வேகமாக வலம் வந்துகொண்டுள்ளது. கடந்த புதனன்று ஏர் ஆசியா இந்தோனேசியா விமானத்தில் டோனி அவ்வுதவியைச் செய்துள்ளார். இந்தோனேசியாவில் சிறப்பான ஒரு நாளினை பெற்றேன் எனும் தகவலு டன் ஏர் ஆசியா இந்தோனேசியா பணியாளருடன் ஓர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒரு படத்தையும் அவர் இன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ளார். பிறகு தாம் விமானப் பணியாளருக்கு உதவிய வேளையில் அது ரகசியமாக படமாக் கப்பட்டிருப்பது குறித்தும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். உலக விமான சிப்பந்திகள் தினத்தில் விமானத்தில் பயணிகள் நிறைந்திருந்தனர். அந்நிலையில் விமானப் பணியாளருக்கு உதவ தீர்மானித்ததாகக் கூறியுள்ள டோனி கடுமையாக உழைக்கும் எல்லா விமானப் பணியாளர்களுக்கும் நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த உடையை நேசியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அவரின் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் அவரை புகழ்ந்துள்ளனர். பணியாளர்களை அன்பாக நடத்துவதை நேசிப்பதாகவும் அது ஓர் உண்மையான தலைவரை குறிக்கிறது எனவும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்