நாட்டிற்கு மறுபடியும் பிரதமராக வருவது குறித்து தாம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக 22 ஆண்டு காலம் பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், தற் காலிக பிரதமராக பொறுப்பேற்க நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எனினும், நான் தான் மறுபடியும் பிரதமராக வர வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக இருந்தால் எனது முடிவை பரிசீலனை செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க அண்மைய மாதங் களாக தான் மறுத்து வந்ததைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.ஆனால் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள என் நண்பர்களின் கருத்துக் களுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று அவர் கூறினார். எதிர்க்கட்சிக் கூட்டணியின் இதர பங்காளிக் கட்சிகளான ஜசெக, பிகேஆர், அமானா ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார். முகநூல் வழி நடத்தப்பட்ட நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது ஒரு பயனர் எழுப்பிய கேள்விக்கு பக்காத்தான் ஹராப்பானின் புதிய உறுப்புக் கட்சி யான பிபிபிஎம்மின் அவைத் தலைவரான மகாதீர் இந்த பதிலை அளித்தார். தான் ஒரு ஓய்வூதியதாரர் என்றே இன்னும் கருதுவதாக கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், பிரதமர் பொறுப்பை மீண்டும் ஏற்பதில்லை என கடந்த காலத்தில் தான் கூறி வந்ததை சுட்டிக் காட்டினார்.பிரதமராக 22 ஆண்டுகள் பதவி வகித்த தனக்கு இருக்கும் அனுபவத்தை பற்றி குறிப்பிட்ட டாக் டர் மகாதீர், நாடு எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண நடத்தப்படும் விவாதங்களில் கலந்து கொள்ள தனக்கு எவ்வித மன உறுத்தலும் கிடையாது என்றார். எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் எனது பங்கை ஆற்ற நான் தயார்.கடந்த மாதம் எப்எப்டிக்கு வழங்கிய ஒரு சிறப்பு நேர்காணலின்போது தான் பிரதமராக மீண்டும் வர தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்தார்.அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் எண்ணமும் தனக்கு கிடையாது என அவர் தெரிவித்திருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்