img
img

கணவரின் கை எங்கே?
வெள்ளி 02 ஜூன் 2017 13:33:09

img

ஈப்போ கணவரை கொலை செய்துவிட்டு அவரின் இடது கரத்தை வெட்டி எடுத்துச் சென்ற கொடியவர்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட புலன் விசா ரணையில் மன நிறைவு கொள்ளாத மாது ஒருவர் நேற்று இங்குள்ள மத்திய காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்தார். என் கணவரின் துண்டிக் கப்பட்ட இடது கரம் எங்கே? அதனை ஏன் போலீசார் எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பினார். கடந்த மே 5ஆம் தேதி காலை 8.20 மணியளவில் லெங்கோங் கோத்தா தம்பான் எனுமிடத்தில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் முதியவர் லட்சுமணன் த/பெ கந்தன் இரண்டு ஆடவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையுண்ட அந்த முதியவரின் இடது கரத்தை வெட்டி துண்டாக்கி அதயைும் அந்த கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இக்கொடூரச் சம்பவத்திற்கு பிறகு இரண்டு இந்திய ஆடவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினர், என்றாலும் முதியவரின் இடது கரம் ஒப்படைக்கப்படவில்லை. முதியவரின் இறுதிச் சடங்கும் முடிந்துள்ள நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளியேறி விட் டனர். இவ்விவகாரம் குறித்து லெட்சுமணன் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். குறிப்பாக அவரது மனைவி திருமதி பாக்கியம் மிகுந்த மனவேதனையில் இருந்தார். தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியும், துண்டிக்கப்பட்ட கணவரின் இடது கரத்தை ஒப்படைக்க கோரியும் போலீஸ் புகார் செய்வதற்கு சென்ற போது போலீசார் புகாரை பெற மறுத்துவிட்டது ஏமாற்றத்தை தந்தது என்று திருமதி பாக்கியம் கூறினார். மேலும் என் கணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் எங்கள் இடத்திலேயே இருந்ததால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி எனது ஏழு பிள் ளைகளையும் அழைத்துக் கொண்டு நாங்கள் ஈப்போவிற்கு வந்து விட்டோம். புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் அவர்களிடம் முறையிட்டோம். எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வேண்டினோம். நேற்று குடும்ப உறுப்பினர்களுடன் ஈப்போ மத்திய போலீஸ் நிலையம் வந்த ஆதி. சிவசுப்பிர மணியம், திருமதி பாக்கியம் போலீஸ் புகார் செய்வதற்கு உதவி செய்தார். இவ்விவகாரம் மிக கடுமையாக கருத வேண்டிய போலீஸ் படை இதில் அலட்சியப் போக்கு காட்டக்கூடாது என்பதால் இவ்விவகாரத்தை அடிமட்டத்திலிருந்து மீண்டும் விசாரணை செய்ய பேரா போலீஸ் படைத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று பாக்கியம் கோரிக்கை விடுத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img