ஷா ஆலம் நாட்டில் மிகவும் பழைமை வாய்ந்த 126 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட யூ.எஸ்.ஜே. முன்னாள் சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிலம், நேற்று பறிபோவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீதிமன்ற ஆணையின்படி அந்த நிலத்தின் மேம்பாட்டாளர் குறித்த நேரத்தில் ஆலயத்திற்கு வராததால் 600க்கும் மேற்பட்ட இந்துக்கள் மின்னல் வேகத்தில் குவிந்த வேளையில் நில மீட்புக்கான நீதிமன்ற ஆணை தற்காலிகமாக நிறுத்தம் கண்டது. காலையிலிருந்து ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மக்களின் ஒற்றுமையாலும் பிரார்த்தனையாலும் ஆலயம் உடைபடும் அபாயத் தில் இருந்தும் கைமாறிப் போகும் நிலையில் இருந்தும் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆலய பராமரிப்பாளர்களும் அரசு சாரா பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். நேற்று காலை 6.00 மணி தொடங்கி ஆலயத்தில் திரளாக மக்கள் கூடியிருந்த வேளை யில் காலையில் 8.00 மணியளவில் நீதிமன்ற ஆணையத் துடன் மேம்பாட்டாளர் தரப்பினர் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் காலை 9.00 மணிக்கு அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் காலை 10.00 மணிக்கு மேல் ஆகியும் தரப்பு வரவில்லை என்பது உறுதியான பின்பு சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஆணை நிறுத்தம் கண்டுள்ளதாக தங் களின் வழக்கறிஞர் வாயிலாக தெரிவிக்கப்பட்டதாக ஆலய பராமரிப்பு குழு தலைவர் நாகராஜூ மேகநாதன் கூறினார். இந்த நீதிமன்ற ஆணை நிறுத்தம் கண்டாலும் இது தற்காலிகம் என்பதால் இதற்கு முறையான தடையுத்தரவை பெறும் முயற்சி தங்களின் வழக் கறிஞர் மூலமாக செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார். 126 ஆண்டுகால ஆலயத்தை தற்காக்கும் நடவடிக்கைக்காக மக்கள் பலமாக புதிய நடவ டிக்கை குழு நேற்று நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார். இந்த பணிக்குழுவில் அரசியல் நோக்கமில்லாமல் முக்கிய கட்சிகளில் உள்ளவர்களும் அரசு சாரா அமைப்புகளில் உள்ளவர்களும் தன்னார் வத்தோடு இணைந்துள்ளனர் என்று நாகராஜூ கூறினார். டத்தோ டி. மோகன், பூச்சோங் முரளி, ஹிண்ட்ராப் ரகு,சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் ராம்ஜி உட்பட சிலரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள னர் என்று அவர் சொன்னார். இதனிடையே நேற்று இங்கு 50 அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்று டத்தோ டி.மோகன் கருத்துரைத்தார். இந்த வரலாற்று மிக்க ஆலயத்தை இங்கேயே நிலை நிறுத்த அரசியல் பேதம் பாராமல் போராடுவோம் என்றார். ஆலயத்தை நிலைநிறுத்தும் முயற்சிக்கு துணையாக இருப்பதோடு மேம்பாட்டாளர் நடவடிக்கையில் விழிப்புடன் இருக்கும்படி பூச்சோங் முரளி கேட்டுக்கொண்டார். இந்த நில விவகாரத்தில் மாநில அரசாங்கம், குறிப்பாக மந்திரி புசார். ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் ஆகியோர் அலட்சியம் காட்டாமல் தீர்வு காண களமிறங்க வேண்டுமென சமய அமைப்பு பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டார்கள். கடந்த 20 ஆண்டுகளாக ஆலயத்திற்கே வராத ஒருவரிடம் ஆலயத்தை ஒப்படைக்கக்கூடாது. அம்பாளின் சக்தியில் ஆலயம் இங்குதான் இருக்கும். அதற்காக தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று சிவசுப்பிரமணியம் கருத்துரைத்தார். மஇகா கோத்தாராஜா தொகுதி டத்தோ ஆர்.எஸ் மணி யம் உட்பட மஇகா இளைஞர் அணியினர், பிகேஆர் ஆதரவாளர்கள் என பலரும் கட்சி பேதம் காட்டாமல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்