கோலாலம்பூர் மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக விஷ்ணுதரன் காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயதுடைய விஷ்ணுதரன் இன்று முதல் இந்தப் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன், இவர் சபா மாநில குடிநுழைவுத் துறையின் நிதிப் பிரிவில் தலைவராக இருந்துள்ளார். சுங்கை சிப்புட் டோவென்பி தோட்டத்தில் கம்போங் ராமசாமியில் பிறந்து வளர்ந்தவரான விஷ்ணுதரன் திரெங்கானு மலேசியா பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு உயிரியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் பொதுச் சேவைத் துறையில் வீடமைப்பு ஊராட்சி துறையில் 2009-ஆம் ஆண்டில் இணைந்தார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி வீடமைப்பு ஊராட்சித் துறையில் அமலாக்கா அதிகாரியாக இணைந்த அவர் 2010ஆம் ஆண்டு சபா மாநிலத்தில் வீடமைப்பு ஊராட்சித் துறையின் சபா அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2014ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி விஷ்ணுதரன் சபா மாநில குடிநுழைவுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டு காலமாக மே 31ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருந்து வந்த அவர், இன்று முதல் மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சபா மலேசியா பல்கலைக்கழகத்தில் மனித மூலதன நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவரான விஷ்ணுதரன் தம் மீது நம்பிக்கை வைத்துத் தம்மை மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக நியமித்த குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி மற்றும் சபா குடிநுழைவுத் துறை இயக்குநர் துவான் முசா சுலைமான் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். குடிநுழைத் துறையின் நற்பெயரைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்குப் பொறுப்புணர்வோடு செயலாற்றுவதற்கு உறுதி பூண்டிருப்பதாக ஒரு நாளிதழில் வழங்கிய பேட்டியில் விஷ்ணுதரன் தெரிவித்தார். இந்தப் புதிய பொறுப்பு சவால் நிறைந்ததாக இருந்தாலும் குடிநுழைவுத் துறையின் நற்பெயரை நிலைநாட்டுவதற்குச் சிறந்த சேவையை வழங்குவதற்குத் தாம் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்