கோலாலம்பூர் மென்செஸ்டர் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று மலேசிய மாணவர்கள் கைதாகியுள்ளனர். எனினும் இவர்களிடமிருந்தது வாக்குமூலம் பெற்ற பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களை விடுவித்துள்ளதாக துணை வெளிவிவகார அமைச்சர் ரீசால் மெரிகான் ஓர் அறிக்கையில் தெரிவித் துள்ளார். இந்த மூவரும் தங்கியிருந்த வாடகை வீட்டில் கைது செய்யப் பட்டனர். வெடிகுண்டு சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகி றது. இந்த மூன்று மாணவர்களில் இருவரை தமக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும் என்று துணை வெளிவிவகார அமைச்சர் ரீசால் மெரிகான் தெரிவித்தார். இவ்வாண்டு தொடக்கத்தில் மென்செஸ்டரில் நிகழ்ந்த நிகழ்ச் சியில் இவர்கள் இருவரையும் நான் பார்த்திருக்கிறேன். மூன்று மாணவர்களுக்கும் உதவி நல்கிய லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மென்செஸ்டரில் உள்ள மலேசிய மாணவர்கள் மலேசிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது பிரிட்டன் அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமாக விடுக்கும் உத்தரவுகளை இவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று துணை வெளிவிவகார அமைச்சர் ரீசால் மெரிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மென்செஸ்டர் போலீசார் தங்களை மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்ததாக இந்த மூவரும் தெரி வித்தனர். இரண்டு மாணவர்களில் ஒருவர் அரிப் பர்ஹான். மற்றொருவர் முகமது ஹெல்மி. மூன்றாவது மாணவரின் விவரம் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு மலேசிய மாணவர்கள் மென்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில்கின்றனர். மென்செஸ்டர் வெடிகுண்டு சம்பவத் தினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்