கோத்தா பாரு போலீசாரின் எச்சரிக்கையை மீறி தாக்குதலை நடத்திய இரு அந்நிய நாட்டவர்கள் ஜாலான் சோலார் பாருவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.புரோட்டோன் வீரா ரகக் காரில் சென்ற 4 அந்நிய நாட்டவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் வாகனத்தை வேகமாக செலுத்தியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்கள் பயணித்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிலிருந்து வெளியானவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டதில் இருவரின் உடலில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததுடன் ஸ்தலத்திலேயே மரணமுற்றுள்ளனர். மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நால்வர் இதற்கு முன்பு வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவர். மேலும் இவர்கள் மீது ஏற் கெனவே பல குற்றப்பதிவுகள் இருப்பதுடன் போலீசாரால் தேடப்பட்டு வருபவர்களும் ஆவர். இந்த சம்பவம் தொடர்பில் மேல் விசாரணை தொடரப்பட்டு வருகிறது. பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில குற்றவியல் விசா ரணை பிரிவின் தலைவர் முகமட் ஃபக்ரி சே சுலைமான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்