img
img

இரசாயனம் அற்ற அழகியல் பொருட்கள் ஆய்வில் சாதனை படைக்கும் பவானி நேசமணி
புதன் 31 மே 2017 16:33:17

img

அளவுக்கு அதிகமான இரசாயனம் உள்ள காரணத்தால் மிகவும் பிரபலமான அழகுப் பொருட்கள் அண்மையில் சுகாதார அமைச்சால் தடைசெய்யப்பட் டுள்ளது பொதுமக்களிடையே, குறிப்பாக மகளிரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலம் காலமாகக் குறிப்பிட்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு இது நிச்சயம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும். தங்களின் முக அழகிற்காகவும் பொலிவிற்காகவும் பயன்படுத்தி வந்த பொருட்கள் உண்மையில் விஷம் என்பதை அறியும்போது அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படத்தான் செய்யும். இன்றைய கால கட்டத்தில் பெண்களிடையே தங்களின் பணி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பெற்றிருக்கும் விழிப்புணர்வைப் போன்று இன்னும் தங்களின் அழகியல் சார்ந்த விஷயங்களில் பெறவில்லை. இந்த அலட்சியப் போக்கு அல்லது அறியாமையே சில காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு விஷமாக மாறிவிடுகிறது எனக் கூறுகிறார், பவானி நேசமணி. பவானி உக்ரேயினில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர். பயிற்றுனராக எச்ஆர்டிஎப் சான்றிதழ் பெற்றவர். எண்ட்ராகோகி ஆலோசகர். மேலும், மாயி (MAYI) ஆயுர்வேதிக் தெராபிஸ்ட்டிக்கான சான்றிதழும் பெற்றவர். இரசாயனம் அற்ற அழகியல் பொருட்களை உருவாக்கும் முயற்சியிலும் ஆய்விலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். அதிக நுரைகள், குமிழிகள், வாசனை போன்ற அழகியல் சார்ந்த பொருட்களில் பெரும்பான்மையானவை நமது தோலுக்குப் பாதுகாப்பற்றவையாகத்தான் உள்ளன. ஆனால், இவற்றைத்தான் பெண்கள் பயன்படுத்துகின்றனர். கவர்ச்சியாகக் காட்டப்படும் அழகியல் பொருட்களால் கவரப்படும் பெண்களிடையே பெரும்பாலும் அவற்றைப் பற்றி ஆராய்ந்து தகவல்களை அறியும் பண்பு இருப்பதில்லை. இது மாற்றப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு தோல்தான். ஒரு வகையில் நம்மைப் பாதுகாக்கும் கவசம் எனவும் கூறலாம். அதே சமயம், தோலில் தடவும் எந்தப் பொருளோ அல்லது இரசாயனமோ குறைந்தபட்சம் 1 நிமிடத்திலேயே தோலில் உட்புகுந்து விடும். ஏறக்குறைய நாம் சாப்பிடும் முறையை ஒத்தது இது. எப்படி நாம் சாப்பிடும் உணவுகளின் பாதிப்புகளை அனுபவிக்கிறமோ அது போன்றுதான் தோலில் தடவப்படும் பொருட்களில் உள்ள இரசாயனமும் உடலில் செல்லும். குறிப்பாக, நாம் பயன்படுத்தும் அழகியல் பொருட்களில் மெர்க்கியூரி போன்ற ஆபத்தான இரசாயனங்கள் எளிதில் உட்புகுந்து ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது தோல் உடலின் கவச மாகவே இருந்தா லும் கூட இத் தகைய இரசாய னங்கள் உட்புகு வதைத் தவிர்க்க இயலாது. இன்று முகத்தை அழகுப்படுத் தவும் பொலிவக்கவும் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான செயற்கைப் பொருட்களிலும் ஷவர் க்ரீம்களிலும் எஸ் எல்எஸ்/எஸ்எல்இஎஸ், பிஇஜி, திரைலோஷன், கோல் தார் டைய்ஸ், பாராபென், பெட்ரோலதூம், பார்ஃபூம், சிலோஷேன்ஸ் போன்ற 12 இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. இது போன்ற இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ள அழகியல் பொருட்கள் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ளதும் இங்கு குறிப் பிடத்தக்கது. இந்த விஷயத்தை அறிந்திருந்தாலும் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சில காலத்திற்குப் பிறகே அதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குகின்றனர். நிலைமை மோசமான பிறகாவது அவர்கள் உண்மையை உணர்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய இன்னொரு இரசாயனக் கலவை கொண்ட அழகியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். உண்மையில், அழகியல் பொருட்களைப் பயன்படுத்தி பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பயனீட்டாளர்களுக்குப் சுகாதார அமைச்சில் புகார் செய்யவும் உரிமை உண்டு. ஆனால், இதை யாரும் செய்வது கிடையாது. ஒரு க்ரீம்க்கு மாற்றாக உடனடியாக இன்னொரு க்ரீமைப் பயன் படுத்தத் தொடங்கு கின்றனர். இந்த விவகாரத்திலும் நமது பெண்களிடையே விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார். எவ்வாறு அழகியல் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது? அழகியல் பொருட்களை வாங்கும்போது அதில் வாசனை அதிகம் உள்ளதா? ஒரே வாரத்தில் முகத்தைப் பொலிவாக்கி அல்லது வெள்ளையாக்கி விடுமா? நுரை அதிகமாக வருமா என்பதை எல்லாம் தேடுவதைத் தவிர்த்து குறிப்பிட்ட அந்தப் பொருள் என்பிஆர்ஏ/பிபிஎஃக்கேயில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என் பதை முதலில் ஆராய்வது அவசியம். பொருட்களில் என்ன வகை கலவையின் கூறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை அறியுங்கள். இன்னும் குழப்பமாக இருந்தால் மருத்துவரோடு கலந்தாலோசியுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய இயற்கை பராமரிப்பு முறையிலே அழகியலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எண்ணெய் குளியல் என பல வழிகள் உண்டு. இயற்கை சார்ந்த, பக்க விளைவுகள் ஏதுமில்லாத வழிகள். ஒரு பொருளைப் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளரின் உரிமை மற்றும் தேர்வு. இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதா அல்லது செயற் கைப் பொருட்களைப் பயன்படுத்துவதா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், அவர்கள் விழிப்புடன் கூடிய விவேகமான பயனீட்டாளர்களாக இருப்பது அவசியம் என அவர் கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img