ஜொகூர்பாரு, தீவிரவாதிகளுக்கு எதிராக ஜொகூர் மாநிலம் முழுவதிலு முள்ள முக்கிய இடங்கள் வர்த்தக மையங்கள் போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள் ளனர்.நாட்டுக்குள் வரக்கூடிய வாயில்களிலும் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாயில்களிலும்கூட தீவிர சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக ஜொகூர் மாநில குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் தெரிவித்தார். நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்த டத்தோ கமாருல் ஜமான் மாமாட் சீனாய் அனைத்துலக விமான நிலையம் படகுத் துறைகளிலும்கூட சோதனைகள் வலுப்படுத்தப்பட் டுள்ளதாக குறிப்பிட்டார். குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த போலீசார் கருப்பு ஆடைகள் அணிந்தவாறு நாள்தோறும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என குறிப்பிட்ட அவர், ஜொகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பேருந்து நிலையங்கள், விற்பனை மையங்கள், சந்தைகள், வங்கிகள், நகைக் கடைகள் போன்ற பகுதிகளிலும் கருப்பு ஆடைகள் அணிந்த போலீ சார் நடமாடுவர் எனவும் குறிப் பிட்டார். நேற்று முன்தினம் தொடங் கிய இச்சோதனை வழி நேற்று முன்தினம் மட்டும் இந்தோ னேசியா, சிங்கப்பூர், வங்காள தேசம் மற்றும் நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட் பட மொத்தம் 217 பேரிடம் சோதனை மேற்கொள்ளப் பட்டதாக குறிப்பிட்ட அவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களில் போலீசார் அதிக கவனம் செலுத்துவர் என குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்