ஜார்ஜ்டவுன், திடீர் வெள்ளத்தில் தனது தொழில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், வெள்ளத்திற்கு காரணமான நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஒரு வழக்கறிஞரை நம்பி மோசம் போனதாக புகார் தெரிவித்துள்ளார் சுங்கை ஆராவைச் சேர்ந்த நாகசெல்வி. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர் தனது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை பெறுவதில் மோசடி செய்திருப்பதாக அவர் சொன்னார். கடந்த 2012 -ஆம் ஆண்டு பழைய இரும்பு சாமான்கள் விற்கும் கடையை இங்குள்ள லோட் எண் 225, புக்கிட் உமா,சுங்கை ஆரா பகுதியில் நடத்தி வந் ததாக நாகசெல்வி (55) குறிப்பிட்டார். தனக்கு நேர்ந்த துயரம் பற்றி அவர் மேலும் இவ்வாறு விளக்கம் அளித்தார்.வியாபாரம் நல்ல முறையில் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், அப்பகுதியில் எஸ்.பி.செத்தியா என்ற வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆற்றோரம் மதில் சுவர் எழுப்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறு மேலும் குறுகலாகியது. தொடர்ந்து, கடந்த 2012 மே 5-ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு பெய்த கடுமையான மழையின் காரணமாக ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஆற்றோரம் இருந்த எங்கள் கடையில் வெள்ளம் ஏற்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி பொருட்களும் மற்ற தளவாடங்களும் முற்றாக சேத மடைந்தன. அது மட்டுமின்றி, இந்த சம்பவத்தினால் எங்கள் கடையில் இருந்த 2 லோரிகள்,2 மோட்டார் சைக்கிள்கள், ஜெனரேட்டர்கள், மின்சாரப் பொருட்கள், இரும் புகளை வெட்டும் கருவிகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி வெ.350,000 இழப்பு ஏற்பட்டது என்றார் அவர். இந்த திடீர் சம்பவத்தால் தங்களின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது என்றும் பல்வேறு சிரமங்களுக்கிடையே வீடு உட்பட சேமிப்பில் இருந்த பணம், நகைகள் அனைத்தையும் கடன் செலுத்துவதற்காக பயன்படுத்தி சேமிப்புகளை இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத பரிதாப நிலைக்கு ஆளாகியதாகவும் அவர் கண்ணீர் மல்கக் கூறினார். இதனை தொடர்ந்து, உறவினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் ஒரு வழக்கறிஞரின் உதவியை நான் நாடினேன். ஆனால், அந்த வழக்கறிஞர் இது நாள்வரையில் எங்களுக்கு சாதகமாக எதையும் செய்ததில்லை. எங்கள் நிலைமை இன்னும் கேள்விக்கிடமாகவே உள்ளது. எஸ்.பி.செத்தியா மேம்பாட்டு நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க அந்த வழக்கறிஞரை நாடினேன். எங்களுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். எனினும், ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்த வழக்கறிஞர் உண்மையில் எங்களுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளாரா என்பதும் எங்களுக்கு புரியவில்லை என்று நாகசெல்வி தொடர்ந்து கூறினார். சம்பந்தப்பட்ட அந்த வழக்கறிஞர் முறையாக வழக்கை நடத்தியிருந்தால் தங்களின் குடும்பம் இத்தகைய பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர். இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் இந்திய அரசியல் கட்சிகளிடம் உதவ வேண்டி பல முறை சென்றுள்ளோம். ஒரு பயனும் இல்லை என்று தனது மன ஆதங்கத்தை நாகசெல்வி வெளிப்படுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக அன்றே அந்த மேம்பாட்டு நிறுவனத்துக்கு எதிராக போலீஸ் புகார் ஒன்றையும் பாலிக் பூலாவ் காவல் நிலையத்தில் நாக செல்வி செய்துள்ளார். இதனிடையே, வழக்கறிஞருக்கு எதிரான இந்த புகாரை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு செல்லும் பொருட்டு, பாராட் டாயா மாவட்ட காவல் நிலைய தலைவர் துவான் அன்பழகனின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்