நான்கு வயது சிறுமி லாரணியாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவரின் தந்தை வி.வில்பெர்ட் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படாமல் விடு விக்கப்பட வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வில்பெர்ட், கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றத்தடுப்பு சட் டத்தின் (பொக்கா) கீழ் பொக்கோக் செனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ஜூன் 28ஆம் தேதி விடுவிக்கப் பட வேண்டும். ஆனால், அவரின் சகாக்கள் பலரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதால் அவருடைய தடுப்புக் காவலும் நீட்டிக்கப்படலாம் என நாங்கள் அஞ்சுகிறோம் என்று நம்பிக்கை மலேசியா இயக்கம் கூறிற்று. சுஹாகாம் ஆணையர் ஜெரால்ட் ஜோசப்பிடம் மகஜர் ஒன்றை ஒப்படைப்பதற்கு முன்னர் அந்த இயக்கத்தின் தலைவர் இதை தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை உள்துறை அமைச்சிடம் நாங்கள் எழுப்பி இருக்கிறோம். அவர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என நாங் கள் கோருகிறோம். இதற்கு முன்னர் லாரணியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வில்பெர்ட் கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் வெளியே அனுமதிக்கப்பட்டார் என்றார் அவர். குண்டர் கும்பல் நடவடிக்கை களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொக்கா சட்டத்தின் கீழ் வில்பெர்ட் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்பட்டுள்ளார். சுஹாகாம் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட் டிருந்தால் ஏதாவது நேர்ந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார். லாரணியாவின் குடும்ப உறுப்பினர்கள் சுஹாகாமின் உதவியை நாடி இருப்பது இது இரண்டாவது முறையாகும். லாரணியாவின் மரணம் குறித்து தான் விசாரணை நடத்தப் போவதாக கடந்த மார்ச் மாத இறுதியில் சுஹாகாம் வாக்குறுதி அளித்து இருந்தது. லாரணியா கடந்த மார்ச் 20ஆம் தேதி துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறியதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் மரணம் குறித்து புலன் விசாரணை செய்யும்படி சுஹாகாமிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மருத்துவமனை யின் இந்த கூற்றை லாரணியாவின் தாயார் பிரேம்ஸ்ரீ மறுத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்