குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 'கேங் 360 தேவன்' கும்பலுடன் தக்க காரணங்கள் இன்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் சித்தி ராட்ஸியா கமாருடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு தனக்கு புரிகிறது என குறிக்கும் வகையில் இன்ஸ் பெக்டர் எஸ்.குஷாலனி (வயது 31) தலையை அசைத் தார். 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச்செயல் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா) கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால்,அவரிடம் வாக்கு மூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை உயர்நீதி மன்றத்திற்கு வரும்போது அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும். இங்கு டேசா ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள ஒரு கிளப்பில் நியாயமற்ற காரணங்களுக்காக கேங் 360 தேவன் கும்பலுடன் இருக்க காணப்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். பிராசிகியூஷன் தரப்பில் டிபிபி முகமட் இஸானுடின் அலியாஸும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் சார்பில் வழக்கறிஞர் எஸ்.செல்வமும் ஆஜராகினர். ஜூன் 15ஆம் தேதி விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்படும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்