சுபாங் தனது மகன் சுரேஷ் சுங்கை பூலோ சிறைச்சாலையில் இறந்து விட்டார் என்ற செய்தியினை தம்மால் நம்பவே இயலவில்லை என வீரம்மா தெரி வித் துள்ளார். என் மகனின் மரணத்திற்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும் என்று இந்த தனித்து வாழும் தாய் தனது போலீஸ் புகாரில் குறிப் பிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிஜே போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவால் தடுத்து வைக்கப்பட்ட சுரேஷ் பிறகு சுங்கைப்பூலோ சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று நம்பப்படுகிறது. மே மாதம் 28இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறைச்சாலைக்கு சென்று இரண்டு மூன்று மணி நேரம் மகனை நலம் விசாரித்து வீடு திரும்பினேன். அடுத்த வாரம் மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். அப்போது என் மகன் நலமாகத்தான் இருந்தான், அடுத்த நாள் தமக்கு பெரும் அதிர்ச்சி காத் திருந்தது. லெம்பா சுபாங் அடுக்குமாடி பகுதியில் உள்ள என் இல்லத்திற்கு வந்த சுங்கைபூலோ சிறைச்சாலை அதிகாரி ஒருவர் என் மகன் இறந்து விட் டார் என்று தெரிவித்தபோது நான் அதிர்ச்சியால் உறைந்தேன். சிறைச்சாலையிலிருந்து சுங்கைபூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுரேஷ் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கேள்விப்பட்டோம் என் கிறார் பிஜே உத்தாரா மஇகா தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பத்மநாபன், இதுகுறித்து துல்லியமான விசாரணை தேவை என்றும் பிரேத பரி சோத னைக்குப் பிறகே மற்ற விஷயங்களைப் பற்றி பேசமுடியும். லெம்பா சுபாங் மேம்பாட்டு குழுவின் உறுப்பினருமான எஸ்.பத்மநாபன் இக்குடும்பம் வறு மையில் வாடும் குடும்பம். இறுதிச் சடங்கு விவகாரங்களை நாங்கள் கவனிப்போம். சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் உதவியும் நாடப்படும். சுரேஷின் மரண விவகாரம் சம்பந்தமாக நாங்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்