(கு.ச.இராமசாமி) மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 14ஆவது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும் என நம்பப்படுகிறது. கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 133 நாடாளுமன்ற இடங்களையும் ஜசெக 38 இடங்களையும் கெ அடிலான் 30 இடங்களையும் பாஸ் 21 இடங் களையும் கைப்பற்றின. எனினும் பாரிசான் ஆட்சியே மீண்டும் அமைந்தது. வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் தங்களை தயார்ப்படுத்தி வரும் நிலையில் இந்திய மக்கள் எதிர்பார்க்கும் மஇகா வேட்பாளர்களுக்கான தொகுதிகளில் யார் யார் போட்டி யிடவிருக்கிறார்கள் என்ற ஆரூடங்கள் பரவலாக நிலவி வருகின்றன. இம்முறை மஇகாவிற்கு எதிராக டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு, மகாதீரின் 30 ஆண்டு கால அரசியல் அனுபவ சாணக்கியத்தனத் தினால் ஏற்படப்போகும் எதிர்மறை விளைவு அம்னோவுடன் பாஸ் கூட்டணி அமைப்பது ஆகியவை தேர்தலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் அது மஇகாவிற்கு சோதனையாக அமையலாம் என்று கருதப்படுகிறது. மஇகா இரண்டுபட்டுக் கிடப்பதால் ஹிண்ட்ராப் வேதமூர்த்தி இந்தியர்களுக்கென ஒரு கட்சியை அமைத்து மகாதீருடன் கைகோர்த்திருக்கிறார். இதன் மூலம் அவர் இந்தியர்களின் வாக்குகளை கவரும் சாத்தியம் உள்ளதாகவும் இது தேர்தலில் மஇகாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத் தக்கூடும் என் பன போன்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன சென்ற பொதுத் தேர்தலில் மஇகாவிற்கு ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளும் 18 சட்டமன்றத் தொகுதிகளும் வழங்கப்பட்டன. மஇகா சார்பில் கேமரன் மலையில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ பழனிவேலும் சிகாமட்டில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியமும் தாப்பாவில் போட்டியிட்ட டத்தோ சரவணனும் உலுசிலாங்கூரில் போட்டியிட்ட டத்தோ கமலநாதனும் வெற்றி பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் ஜொகூரில் மூன்று இடங்களையும் நெகிரியில் ஓர் இடத்தையும் மலாக்காவில் ஓர் இடத்தையும் மஇகா கைப் பற்றியது.14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு சென்ற பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளும் 18 சட்டமன்றத் தொகுதிகளும் மீண்டும் கிடைக்குமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுகிறது. சென்ற தேர்தலில் மஇகா தோல்வியுற்ற இடங்கள் மீண்டும் மஇகாவிற்கு வழங்கப்படாது என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டாலும் மஇகா தொகு திகள் மஇகாவிற்கே என தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். ஆனால், மஇகாவிற்கு ஒன்பது நாடாளுமன்ற தொகுதி யும் 18 சட்டமன்ற தொகுதியும் கிடைக்காது என ஒரு சிலர் கூறி வருகின்றனர். இம்முறை மஇகா வேட்பாளர்களில் பெரும் மாற்றம் இருக்கும் என மஇகாவிற்கு அணுக்கமான அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.ஜொகூரில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தாலும் இம்முறை மூன்று சட்டமன்றத் தொகுதிகளே கிடைக்கும் என தெரிகிறது. சென்ற பொதுத் தேர்தலில் தெங்காரா தொகுதியில் போட்டியிட்ட ரவின்குமாருக்கு அத்தொகுதி மீண்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் பல மஇகா தலைவர் கள் களம் இறங்க தேசியத் தலைவரை நாடியிருப்பதாகவும் பேசப்படுகிறது. மஇகாவைச் சேர்ந்த பலர் சட்டமன்றத் தொகு தியிலும் நாடாளுமன்றத் திலும் போட்டியிட அம்னோ தலைவர்களின் ஆதரவை நாடி உள்ளனர். இதன்மூலம் தங்களுக்கு தொகுதி கிடைக்கும் என்ற நப்பாசையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவின் நிலைப்பாடு என்ன என்பதும் கேள்விக் குறியாகும். ஆனால், மஇகாவின் வேட்பாளர்களின் பெயரை அறிவிப்பதில் டத்தோஸ்ரீ சுப்ரா உறுதியான சாதகமான முடிவை எடுப்பாரா? என்ற ஆரூடங்களும் பரவலாக இந்தியர்களி டையே நிலவி வருகின்றன. கஹாங் சட்டமன்றத் தொகுதியும் கம்பீர் சட்டமன்றத் தொகுதியும் புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதியும் தெங்காரோ தொகுதியும் மஇகாவிற்கு நிச்சயம் வழங்கப் படும் என கூறப்படுகிறது. ஆனால், கஹாங் சட்டமன்றத் தொகுதியை அம்னோ கோருவதாக தெரிகிறது. மலாக்காவில் சென்ற சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எஸ்.மகாதேவனுக்கு இம்முறை தொகுதி கிடைக்காது என்றும் அவருக்கு பதிலாக மஸ்ஜிட்தானா தொகுதி தலைவர் டத்தோ கண்ணன், கோத்தா மலாக்கா தொகுதி தலைவர் பன்னீர் செல்வம், மலாக்கா முத லமைச்சரின் சிறப்பு அதிகாரி வி.பி.சண்முகம் ஆகியோர் போட்டியிட தேசியத் தலைவரின் ஆதரவை பெற முயன்றி ருப்பதாக கூறப்படுகிறது. நெகிரியில் ஜெரம் பாடாங் தொகுதியில் டத்தோ மாணிக்கம் மீண்டும் போட்டியிடுகிறார் என்றும் போர்ட்டிக்சனில் இளைஞர் பகுதி துணைத் தலைவர் தினாளன் போட்டியிட லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் காலஞ்சென்ற நெகிரி மாநில தலைவர் டத்தோ எஸ்.எஸ்.ராஜகோபாலின் புதல் வராவார். தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் சென்ற முறை டத்தோ வி.எஸ். மோகன் தோல்வியுற்றாலும் இம்முறை அவருக்கே வாய்ப்பு வழங்கப் படலாம் என்றும் தெரிகிறது.சிலாங்கூரிலுள்ள நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் இம்முறை பெரும் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரான கமலநாதன் சுபாங் ஜெயாவிலும் காப்பாரில் ஆர்.எஸ்.மணியம் அல்லது சிவராஜும் கோத்தாராஜாவில் சக்திவேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். சட்டமன்றத் தொகுதிகளான ஸ்ரீ அண்டலாஸில் போட்டியிட ஆர்.எஸ்.மணியம் பெயரும் அடிபடுகிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பத்துகேவ்ஸ் தொகுதியில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் கள் தோல்வியுற்ற நிலையில் இம்முறை அத்தொகுதியை பெறுவதற்கு அம்னோ தீவிரம் காட்டி வருகிறது. பத்துகேவ்ஸ் தொகுதி, சுங்கை துவா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளராக ரவிச் சந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும் அவருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படுமா என்றும் தெரியவில்லை. மஇகா தொகுதியான காப்பாரில் போட்டியிடும் வேட்பாளரை மஇகா தேசியத் தலைவர் முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. பகாங்கில் பரபரப்பான கேமரன் மலை தொகுதியில் டத்தோஸ்ரீ தேவமணி அல்லது பகாங் மாநில தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ குணசேகரன் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். இதற்கிடையே, இத்தொகுதியில் போட்டியிட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலு வின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகம் ஆர்வம் கொண்டு இருப்பதோடு அதற்கான முயற்சியில் இறங்கியிருப்ப தாகவும் மஇகா வட்டாரத்தில் கிசுகிசுக் கப்படுகிறது. அதோடு, டத்தோ குணசேகரன் சபாய் சட்டமன்றத்தின் மீது கண் வைத்திருந்தாலும் தொகுதி தலைவர் ஆறுமுகத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.பேராவில் சுங்கைசிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், அல்லது இளை ஞர் பகுதித் தலைவர் சிவராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எம்.சரவணனுக்கு தாப்பா நாடாளுமன்றம் மீண்டும் வழங்கப்படலாம். பினாங்கில் இரண்டு சட்டமன்றத் தொகுதி களான பிறை, பாகான் டாலாமில் போட்டியிடுவதற்கு மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தினகரன், சுரேஷ் பெயர்கள் அடிபடுகின்றன. கெடா வில் புக்கிட் செலம்பாவ் தொகுதியில் கெடா மாநில தலைவர் டத்தோ ஜஸ்பால் சிங்கும், லூனாஸ் தொகுதியில் வி.நாகையாவும் போட்டியிடலாம் என மஇகாவிற்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. பேரா சுங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு முனியாண்டி, டத்தோ டி.முருகையா, கே.ஆர்.ஏ.நாயுடு ஆகியோரின் பெயர்கள் அடி படுகின்றன.வரும் 14ஆவது பொதுத் தேர்தல் மஇகாவிற்கு பெரும் போர்க்களமாக அமையும் என இந்திய வாக்காளர்கள் கருதுகின்றனர். இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சியான மஇகாவில் இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளன. ஒரு தரப்புக்கு டத்தோஸ்ரீ சுப்ராவும், மற்றொரு தரப்புக்கு டத்தோஸ்ரீ பழனிவேலுவும் தலைமை ஏற்றுள்ளனர்.இந்நிலையில் மஇகா வழக்கின் முடிவு தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படுமா? தேர்தலுக்கு முன் வழக்கு முடிவு வராவிட்டால் மஇகாவின் நிலை என்ன? மஇகாவுடன் பழனிவேல் தரப்பும் இணைந்து கொண்டால் மஇகா தேசியத் தலைவர் சுப்பிரமணியம் எத்தனை தொகுதிகளை டத்தோஸ்ரீ பழனிவேலுவின் ஆதரவாளர் களுக்கு வழங்கப் போகிறார் என்பதும் கேள்வியே... பழனிவேல் தரப்பிலிருந்து சுப்பிரமணியம் தரப்பில் இணைந்த முன்னாள் மஇகா உதவித் தலைவர் டத்தோ சோதிநாதனுக்கு தொகுதி கிடைக்குமா, அல்லது செனட்டர் பதவி கிடைக்குமா? பழனி தரப்பின் செயலாளராக செயல்படும் ஏ.கே.இராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் சுப்ரா தரப்பில் இணைவாரா அல்லது அவரும் மஇகாவுக்கு எதிராக களத்தில் இறங்குவாரா என்ற பேச்சும் அடிபடுகிறது.சென்ற பொதுத் தேர்தலில் சொற்ப வாக்குகளிலேயே பாரிசான் வேட்பாளர்கள் இந்தியர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னமும் இந்திய வாக்காளர்கள் அரசியலை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டாகவே விளங்கு கின்றனர். பாஸ் கட்சி அம்னோவுடன் கூட்டு சேர்வது பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை. இப்படி பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்ற வேளை யில், இந்திய வாக்காளர்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. இச்சூழ்நிலையில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளில் ஹிண்ட்ராப் வேட்பாளர்களை நிறுத்தும் என அதன் தலை வர் வேதமூர்த்தி பிரகடனப்படுத்தியுள்ளார்.14ஆவது பொதுத் தேர்தல் மஇகாவிற்கு பெரும் சோதனையான தேர்தலாக அமையும் என்றாலும் அதி லிருந்து மீண்டு வர தேசியத் தலைவர் சுப்ரா எப்படி அரசியல் யுக்திகளை கையாண்டு காய்களை நகர்த்தப் போகிறார் என்பதுதான் இந்தியர்களின் ஆவ லான எதிர்பார்ப்பாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்