தமது முன்னாள் சீடரான பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை தம்முடன் ஒப்பிட வேண்டாம் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட் டுக் கொண்டுள்ளார்.தமக்கு எதிராக அறைகூவல் விடுக்க பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் (பிபிபிஎம்) அனுமதியுண்டு என அக்கட்சியின் நிறு வனரான அவர் கூறினார். எனினும் எதிர்கருத்து கூறுவோரை நஜீப் அம்னோவிலிருந்து வெளியேற்றுகிறார் என டாக்டர் மகாதீர் பைனான்சியல் டைம்ஸுடனான நேர் காணலில் கூறியுள்ளார். தமது பிரதமர் பதவி காலத்தில் தமது சம்பளம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. அந்தச் சம்பளத்தில் மனநிறைவடைந்ததாகவும் துன் மகாதீர் கூறியுள்ளார். தாம் பிரதமர் பதவிலியிருந்து விலகியபோது நாடு 2020இல் மேம்பாடடைந்த நாடாகும் இலக்கில் பயணித்தது. எனினும் தமக்குப் பிறகு பிரதமர் பத விக்கு சிறந்தவரை தேர்வு செய்யாத நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கக் கூடாது என்பது எமது மிகப் பெரிய வருத்தமாகும் என்றும் அந் நேர்காணலில் அவர் கூறியுள்ளார். பிரதமர் நஜீப்பின் நிர்வாகம், 1 எம்டிபி விவகாரத்தை 2015 முதல் குறை கூறிவரும் டாக்டர் மகாதீர் நஜீப்பை அதிகாரத்திலிருந்து நீக்க தமது முன்னாள் அரசியல் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். போரஸ்ட் சிட்டி போன்ற மலேசியாவின் மேம்பாட்டுத் திட்டங்களில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்து வரு வதையும் டாக்டர் மகாதீர் குறைகூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்