img
img

எனது தோல்வியை இன விவகாரமாக ஆக்காதீர்!
திங்கள் 29 மே 2017 14:15:48

img

கோலாலம்பூர் அனைத்துலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான குத்துச் சண்டைப் போட்டியில் எனது தோல்வியை ஓர் இன விவகாரமாக ஆக்க வேண்டாம் என்று மலேசியாவைச் சேர்ந்த இளம் வீரர் அகிலன் தாணி கேட்டுக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து 21 வயதான அகிலன் தாணி சனிக்கிழமை இரவு முகநூலில் நேரடியாக பேசும்போது இந்த வேண்டுகோளை விடுத்தார். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார். அவர் வெளியிட்ட இக்கருத்து சமூக வலைத்தளங்களில் பரவ லாக பகிரப்பட்டு வருகிறது.எனது தோல்வியை ஓர் இன விவகாரமாக சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு இருப்பதால் வீடியோ கிலிப் வாயிலாக தாம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அகிலன் குறிப்பிட்டார். நான் ஓர் இந்தியர். அதனால்தான் எனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்காமல் போனது என்று முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தை சிலர் வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து மக்கள் கண்டனமோ, இதனை ஒரு இன விவகாரமாகவோ ஆக்க வேண்டாம். உண்மை நிலை என்னவென்று புரிந்து கொள்ளாமல் தனது குத்துச்சண்டை குறித்து எதிர்மறையான கருத்தை வெளியிடுவது எவ்வகையிலும் நியா யமில்லை என்றார். நான் ஓர் இந்தியர். அதனால்தான் அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறி எனக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண் டாம். நாம் அனைவருமே மலேசியர்களாகவே நான் பார்க்க விரும்புகிறேன்.மலேசியர் என்ற முறையில் என்னை ஒரு மலேசியராக அடையாளம் காணப் பட வேண்டும் என்று கோலாலம்பூரில் பிறந்த வளர்ந்தவரான அகிலன்தாணி மலேசியர்களை கேட்டுக் கொண்டார். நான் எடைத் தூக்கும் பயிற்சியை இந்தியர்ள், சீனர்கள், மலாய்க்காரர்கள், வெளிநாட்டவர் என அவர்களின் மையங்களில் தான் மேற்கொண்டேன். அவர் களுக்கும் நான் உதவி இருக்கிறேன். எனது காதலி கூட ஒரு சீனப் பெண்தான்.நாம் மாறுபட்ட இனத்தவர்கள் அல்ல. நாம் மலேசியாவில் வாழ்கிறோம். ஒன்றுபட்ட மக்களாக இருக்கிறோம் என்று அகிலன் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான குத்துச் சண்டைப் போட்டியில் முதல் சுற்றிலேயே அமெரிக்காவின் பெண் அஸ்க்ரென், அகிலனை வீழ்த்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img