img
img

செரண்டா தமிழ்ப்பள்ளி எங்கே?
திங்கள் 29 மே 2017 13:19:43

img

செரண்டா சிலாங்கூர், செரண்டாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் கட்டுமானப்பணி பாதியிலேயே நின்று விட்ட நிலையில் கொதித்துப்போன வட்டார இந்தியர்கள், செரண்டா தமிழ்ப்பள்ளி எங்கே என்று கேட்டு நேற்று மீண்டும் போராட் டத்தில் குதித்தனர். நேற்று காலை மணி 10.50 அளவில், இங்குள்ள செரண்டா தமிழ்ப் பள்ளியைக் காப்பாற்றுவோம் இயக்கத்தின் தலைவர் ஜீவா தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இங்குள்ள ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தின் முன்புறம் கூடியவர்கள் அருகி லுள்ள சீனப்பள்ளி வரை நடந்து சென்று தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உலுசிலாங்கூர் காவல்துறையினர் பாது காப்பளித்தனர். 2012இல் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முதலாவதாக செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என அடிக்கல் நாட்டினார். எந்த வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப் படாததால் கடந்த 2015இல் துணைக் கல்வியமைச்சரும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன் இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டினார். இன்னும் இரு வாரங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அறிக்கை விட்டார். ஆனால் இன்றுவரை கட்டுமானப் பகுதியில் தூண்கள் ஊன்றப்பட்ட நிலையில் அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக ஜீவா தெரி வித்தார். அப்படியென்றால் மூன்றாவது முறையாக அடிக்கல் நாட்டப்படுமா? அதற்குப் பிறகுதான் செரண்டா தமிழ்ப் பள்ளியின் கட்டடம் எழுமா என கேள்வி எழுப் பினார். அரசாங்கம் இப்பள்ளிக்காக வெ. 63 லட்சம் வழங்கியும் கட்டடம் எழாமல் இருப்பது ஏன் என வினவினார். இப்பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப் படாவிட்டால் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் இங்குள்ள பெற்றோர்களுடன் புகார் செய்ய விருப்பதாகவும் தெரி வித்தார். இப்பள்ளிக்கூட கட்டட பிரச்சினை குறித்து மௌனமாக இருந்து வரும் துணைக் கல்வியமைச்சர் ப.கமலநாதனுக்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ரவாங்கிற்கு அடுத்து அதிக இந்தியர்கள் வாழ்கின்ற பகுதியாக விளங்கி வரும் செரண்டாவில் தமிழ்ப்பள்ளி ஒன்று கட்டப்பட வேண்டும் என்பது வட்டார மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.இதனை கருத்தில் கொண்டு பத்தாங் பெர்ஜுந்தையில் மின்ஞாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் லைசென்ஸை பயன்படுத்தி செரண்டாவில் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்தது. துணைக்கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதனின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளியை விரைந்து கட்டுவதில் கல்வி அமைச்சுக்கு அப்படியென்ன சிரமம் என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img