பாரம்பரிய பெருமைமிக்க இந்து சமயத்தை சிறுமைப் படுத்திய பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடினுக்கு எதி ராக நாடு முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸ் புகார்கள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. இருந்தும் தேசிய போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் பின் அபு பக்கார், பெர்லிஸ் முஃப்திக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் இந்நிலை தொடர்ந்தால், மலேசியாவில் ஒரு மாநில முஃப்தியே சமய பாகுபாடு காட்டும் இந்தப் பிரச்சினையை ஐநா மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக ஹிண்ட்ராஃப் கட்சித் தலைவர் பொன்.வேத மூர்த்தி தெரிவித்துள்ளார். மலேசிய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சமய சுதந்திரத்திற்கும் மலேசிய இறையாண்மையை தற்காக்கவும் அதை நிலை நிறுத்தவும் நாட்டின் மூத்த தலைவர்கள் வகுத்துள்ள சமய - சமூக நல்லிணக்கத்திற்கும் இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முழங்கிவரும் ஒரே மலேசியக் கொள்கைக்கும் வேட்டு வைக்கும் விதமாக செயல்பட்ட பெர்லிஸ் முப்திக்கு எதிராக ஐஜிபி நடவடிக்கை எடுக்காமல் மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் உணர்வுக்கும் கோரிக் கைக்கும் மதிப்பளிக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஸாஹிர் நாயக், பெர்லிஸ் முப்தி ஆகியோருக்கு எதிராக ஜொகூர் மாநிலம், கோத்தா திங்கி, ‘சொன் மோய்’ அரங்கில் நடை பெற்ற கண்டனக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நானும் ஹிண்ட்ராப் வழக்கறிஞர் கார்த்திகேயனும் சிறப்பாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தினர். இந்து சமயத்திற்கு எதிராக கடு மையான கருத்து தெரிவித்த பெர்லிஸ் முப்திக்கு எதிராக இந்த அளவுக்கு நாடு முழுவதும் போலீஸ் புகார் செய்துள்ள நிலையிலும் ஐஜிபி அலட்சியம் காட்டுவது வேதனை யளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்