காராக், தன்னிடம் உதவி கேட்டு வந்த மாணவியை ம.இ.கா.வினர் மிரட்டி இருப்பதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் நேற்று கூறினார். இம் மாதிரி மக்களை மிரட்டுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படியும் அவர் எச்சரித்தார். கடந்த 24/5/17 ஓர் இடைநிலைப்பள்ளி மாணவி என் அலுவலகத்தில் என்னை சந்தித்தார். அவருக்கு அடிக்கடி தலை வலிப்பதாகவும் தான் அணிந் திருக்கும் மூக்கு கண்ணாடியை மாற்றவேண்டும் அதற்கு என் உதவிவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் நிலை உணர்ந்து உடனே அவரை கடைக்கு அழைத்துச் சென்று மூக்குக் கண்ணாடி பெற்றுதந்தேன். அதை நான் என் முக நூலில் பதிவு செய்திருந்தேன். இதை முகநூலில் பார்த்த காராக் வட்டாரத்தை சேர்ந்த ம.இ.கா. உறுப்பினர்கள், அன்று இரவே அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று சரமாரியாக கேள்விகள் கேட்டுள்ளனர். இவ்வளவு நாள் ம.இ.கா.தானே உங்களுக்கு எல்லாம் செய்தது இப் பொழுது ஏன் அங்கு போய் உதவி கேட்டீர்கள் என்று அந்த மாணவி ஏதோ பெரும் தவறு செய்து விட்டது போல் பயமுறுத்தி உள்ளனர். இந்த வேளையில் நான் ம.இ.கா.வினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், பொது மக்களை பயமுறுத்துவதை நிறுத்தி கொள் ளுங்கள். என் தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. என் வேலைகளில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. சந்தர்ப்பம் கிடக்கும் போதெல்லாம் நான் செய்யும் நல்ல சேவைகளை கொச்சைப்படுத்தி புலனங்களில் குரல்பதிவு அனுப்புவோர் தங்களது இந்த செயலை உடனே நிறுத்த வில்லை என்றால் அவர்கள் மேல் தக்க நடவ டிக்கை எடுப்பேன் என்று காமாட்சி எச்சரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்